மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனுக்கு கொவிட்-19 கிருமி தொற்றியுள்ளது. தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இது குறித்து நேற்று திரு டியோ பதிவிட்டார். கிருமித்தொற்று உள்ளதை உறுதிப்பபடுத்திய ஏஆர்டி பரிசோதனையின் புகைப்படத்தையும் சேர்த்து அமைச்சர் பதிவிட்டார். 67 வயது திரு டியோ தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் ஆவார். அன்றாட வழக்கப்படி நேற்று காலையில் ஏஆர்டி பரிசோதனை செய்து கொண்டபோது கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். ஒரு மாதத்துக்கு முன்னர்தான் தாம் இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார். தமக்கு லேசான அறிகுறிகள் உள்ளதாகவும் அவர் பதிவில் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் தற்போது கிருமி தொற்றலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் பலருக்கும் கிருமி தொற்று ஏற்பட்டிருக்கிறது.

