எஸ்பிஎச் மீடியா டிரட்ஸ்ட் வளாகத்தில் நடைபெற்ற வானொலி நேர்காணலுக்கு சென்றிருந்த சட்ட உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தம் மனதுக்கு நெருக்கமான உடற்பயிற்சியை அங்கும் கைவிடவில்லை. நேர்காணலின் நடுவில் அவ்வப்போது தாம் எடுத்து வந்த 'டம்பெல்' எடைக் கருவியைத் தூக்கியடி 'ஸ்குவாட்' எனும் குந்தும் உடற்பயிற்சிகளைச் செய்தார். பின்னர் வானொலிக் கூடத்தின் தரையில் 'புஷ் அப்' பயிற்சிகளையும் செய்தார். உடற் பயிற்சியில் ஆர்வமுள்ள திரு சண்முகம் வாரத்தில் சில நாள், 30 நிமிடம் முதல் 45 நிமிடம் அதற்கு ஒதுக்குவதாகக் கூறினார்.
நேர்காணலின்போதும் உடற்பயிற்சியைக் கைவிடாத அமைச்சர் சண்முகம்
1 mins read
எஸ்பிஎச் மீடியா டிரட்ஸ்ட் வளாகத்தில் நடைபெற்ற வானொலி நேர்காணலுக்கும் 'டம்பெல்' எடைக் கருவியை எடுத்துச் சென்றார் சட்ட உள்துறை அமைச்சர் கா. சண்முகம். அருகில் ஒன்91.3 ஒலிவழியின் ஏங்கலீக் டியோ, பிளையிங் டச்மேன் என்றறியப்படும் மார்க் வான் கய்லன்பர்க் இருவரும்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

