மேம்பாட்டுக்கு பரிந்துரை

மேம்பாட்டுக்கு பரிந்துரை

2 mins read
484dfa26-2d81-47cf-a598-cf4ac1880e0b
-

கொவிட்-19 கொள்­ளை­நோய் சமா­ளிப்பு செல­வி­னங்­களில் மூன்று அர­சாங்க அமைப்­பு­கள் இன்­னும் அதி­க­மா­கக் கவ­னம் செலுத்­தி

­யி­ருக்­க­லாம் என தலை­மைக் கணக்­காய்­வா­ளர் அலு­வ­ல­கம் (ஏஜிஓ) தெரி­வித்­துள்­ளது.

சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம், மனி­த­வள அமைச்சு மற்­றும் சிங்­கப்­பூர் நில ஆணை­யம் ஆகி­யன அந்த மூன்று அமைப்­பு­கள் என்­றும் அது நேற்று வெளி­யிட்ட ஆண்­ட­றிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

அவ­ச­ர­மான சூழ்­நி­லை­யின்­போது உரிய நேரத்­தில் பல்­வேறு சிறந்த நடை­மு­றை­களை இவை அமல்­ப­டுத்­தி­ய­தாகவும் அர­சாங்­கச் செல­வு­க­ளைக் குறைக்­க­ முயன்ற தாகவும் ஏஜிஓ தெரிவித்துள்ளது.

கட்­டுப்­பா­டு­கள் என்று வரும்­போது அந்த அமைப்­பு­கள் இன்­னும் அவற்றை நன்­றா­கச் செய்­தி­ருக்­க­லாம் என்று அறிக்கை கூறி­யது.

2020 ஜன­வரி முதல் கடந்த ஆண்டு மார்ச் வரை­ மூன்று அர­சாங்க அமைப்­பு­களும் $1.51 பில்­லி­யன் செலவு செய்­தன. மனித வளச் சேவை­கள், தங்­கு­மிட வச­தி­கள், உணவு விநி­யோ­கம் போன்­ற­வற்­றுக்­காக இத்­தொகை செல

விடப்­பட்­டது.

மொத்த கொவிட்-19 தொடர்­பான செல­வு­களில் 18 விழுக்­காட்­டின் மீது மாதிரி தணிக்­கையை ஏஜிஓ மேற்­கொண்­டது.

குத்­த­கை­யா­ளர்­க­ளின் யோச­னை­களை மதிப்­பீடு செய்­த­தி­லும் விலை­கள் நியா­ய­மா­ன­வை­யாக இருக்­கின்­ற­னவா என்­பதை தீர்­மா­னிக்­கும் விதத்­தி­லும் குறை­பா­டு­கள் இருந்­ததை அப்­போது அது கண்­ட­றிந்­தது.

மேலும், குத்­தகை ஒப்­பு­த­லுக்­காக சமர்ப்­பிக்­கப்­பட்­ட­வற்­றில் முரண் பாடு­களும் விடு­ப­டல்­களும் இருந்­த­தும் தெரி­ய­வந்­தது.

இவற்­றின் அடிப்­ப­டை­யில், ஆவ­ணப்­ப­டுத்­த­லி­லும் மதிப்­பீடு செய்­வ­தி­லும் மேம்­பாடு தேவைப்­ப­டு­வ­தாக ஏஜிஓ குறிப்­பிட்டு உள்­ளது.

அறிக்கை வெளி­யா­ன­தைத் தொடர்ந்து, மூன்று அர­சாங்க அமைப்­பு­களும் சில நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ரா­கக் காவல்­து­றை­யில் புகார் அளித்து உள்­ளன.

ஏலக்­குத்­த­கை­யைப் பெற ஒழுங்­கற்ற விலை மதிப்­பீ­டு­களை அவை சமர்ப்­பித்து இருந்­த­தாக புகா­ரில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இவற்­றில் சில ஏலக்­குத்­த­கை­க­ளுக்கு சோத­னை­கள் நிறை­வேற்­றப்­பட்டு பொது நிதி­யைப் பயன்­ப­டுத்தி ஏலக்­குத்­த­கையை மேற்­கொள்ள அனு­மதி வழங்­கப்­பட்­ட­தா­க­வும் அவை குறிப்­பிட்­டுள்­ளன.

3 அரசு அமைப்புகளின் கொவிட்-19 செலவினம் தொடர்பாக ஏஜிஓ அறிக்கை