800 மருந்து, மாத்திரைகள் விற்பனையிலிருந்து நீக்கம்

800 மருந்து, மாத்திரைகள் விற்பனையிலிருந்து நீக்கம்

1 mins read
4290aa75-fc23-41be-91cd-676dc4d915cb
-

சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம், இணைய விற்­ப­னைத் தளங்­களில் இருந்­தும் சமூக ஊட­கத் தளங்­களில் இருந்­தும் 800க்கும் மேற்­பட்ட சட்­ட­வி­ரோத சுகா­தா­ரப் பொருள்­களை அகற்றி உள்­ளது. ஷாப்பீ, கேரோசல் மற்­றும் ஃபேஸ்புக் ஆகி­ய­வற்­றில் அந்­தப் படங்­கள் விளம்­ப­ரப்­ப­டுத்­தப்­பட்டு இருந்­தன. பதி­வு­செய்­யப்­ப­டாத நீரி­ழிவு மருந்­து­கள், பாலி­யல் தூண்­டல் பொருள்­கள், முடி உதிர்­த­லைத் தடுக்­கும் மருந்­து­கள் போன்­றவை ஜூன் 23க்கும் ஜூன் 30க்கும் இடைப்­பட்ட நாள்­களில் அகற்­றப்­பட்­ட­தாக ஆணை­யம் நேற்று தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது. இந்­தத் தயா­ரிப்­பு­கள் இங்கு சோதிக்­கப்­ப­ட­வில்லை என்­றும் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட வில்லை என்றும் இது­போன்ற பொருள்­க­ளைப் பயன்­ ப­டுத்­து­வது பாது­காப்­பற்­றது என்­றும் அது கூறி­யது.