$5 மி. கையாடல்: முன்னாள் கூர்க்கா படை அதிகாரிக்கு 10 ஆண்டு சிறை

சிங்­கப்­பூர் காவல்­து­றை­யின் கூர்க்கா படைப்­பி­ரி­வைச் சேர்ந்த சார்­ஜண்ட் ஒரு­வர் தமது சொந்த சமூ­கத்­தி­ன­ரி­டம் $5.4 மில்­லி­யன் கையா­டல் செய்து, ஒரு பகுதி பணத்தை இணைய சூதாட்­டத்­திற்­குப் பயன்­ப­டுத்­தி­னார். தற்­போது 36 வய­தா­கும் பிகாஷ் குருங் என்­னும் அந்த ஆட­வ­ருக்கு நேற்று பத்து ஆண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்டது.

சிங்­கப்­பூர் பணத்தை உயர்­வான நாணய மதிப்­பில் நேப்­பா­ளத்­திற்கு அனுப்­பித் தரு­வ­தா­கக் கூறி 196 பேரி­டம் இவர் பணம் வாங்­கி­னார். இருப்­பி­னும், வாங்­கிய பணத்­தில் $211,000ஐ மட்­டும் அவர் நேப்­பா­ளத்­திற்கு அனுப்­பி­னார். ஏரா­ள­மான பணத்தை அவரே வைத்­துக்­கொண்­டார். ஒவ்­வொ­ரு­வ­ரி­டம் இருந்தும் $2,000 முதல் $240,000 பணத்தை அவர் கையா­டி­னார். 2018 செப்­டம்­பர் 24ஆம் தேதி வேலை­யி­லி­ருந்து பிகாஷ் தற்­கா­லிக நீக்­கம் செய்­யப்­பட்­டார்.

நம்­பிக்கை மோசடி செய்த 25 குற்­றங்­க­ளை­யும் சட்­ட­வி­ரோத சூதாட்ட நட­வ­டிக்கை தொடர்­பான ஒன்­பது குற்­றங்­க­ளை­யும் அவர் நீதி­மன்­றத்­தில் ஒப்­புக்­கொண்­டார். இதர 188 குற்­றச்­சாட்­டு­கள், தண்­டனை விதிப்­பின்­போது கவ­னத்­தில் கொள்­ளப்­பட்­டன. கையா­டல் குற்­றங்­கள் 2016ஆம் ஆண்டு நடை­பெற்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. காற்­பந்து சூதாட்­டத்­தில் பெரு நஷ்­டம் ஏற்­பட்­டது. மேலும் சூதாட்­டத்­திற்­குப் பணம் தேவைப்­பட்­ட­கார­ண­த்தால், சமூ­கத்­தி­னர் தம் மீது வைத்­தி­ருந்த மதிப்­பைப் பண­மாக்க முயன்­றார்.

தமது வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் சிங்­கப்­பூர் வெள்­ளி­யைப் பெற்று அதி­லி­ருந்து பொருள்­களை வாங்கி நேப்­பா­ளத்­திற்கு அனுப்­பு­வ­தா­க­வும் அங்கு அந்­தப் பொருள்­களை நல்ல விலைக்கு விற்று லாபத்­து­டன் மொத்­தப் பண­மும் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் குடும்­பத்­தி­டம் தரப்­படும் என்றும் பிகாஷ் உறுதி அளித்­தி­ருந்­தார். அதனை நம்பி, ஓய்வு பெற்ற அதி­கரி ஒரு­வர் 2017 டிசம்­ப­ருக்­கும் 2018 ஏப்­ர­லுக்­கும் இடை­யில் $240,000 பணத்தை பிகா­ஷி­டம் கொடுத்­தார். ஆனால், அந்­தப் பணம் அவ­ரது குடும்­பத்­திற்­குச் சென்று சேர­வில்லை. இவ்­வாறு பல­ரும் பிகா­ஷி­டம் பணம் கொடுத்து ஏமாந்­த­தால் காவல்­து­றை­யி­டம் புகார் அளிக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!