தகராறு செய்ததாக ஜோகூரில் கைதான ஆணும் பெண்ணும் பிணையில் விடுவிப்பு

தகராறு செய்ததாக ஜோகூரில் கைதான ஆணும் பெண்ணும் பிணையில் விடுவிப்பு

1 mins read
aca37a8c-ad4c-43cb-b087-5aeab0896342
சமூக ஊடகங்களில் வலம்வந்த படங்கள். -

துவாஸ் இரண்­டா­வது பாலத்­தில் மற்­றொரு வாக­ன­மோட்­டி­யு­டன் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­தற்­காக ஜோகூ­ரில் கைது செய்­யப்­பட்ட சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த இரு­வர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்டு உள்­ள­னர். விடு­விக்­கப்­பட்­ட­தும் அவ்­வி­ரு­வ­ரும் சிங்­கப்­பூர் திரும்­பி­விட்­ட­தாக இஸ்­கந்­தர் புத்­திரி மாவட்ட காவல் துறை அதி­காரி ரஹ்­மத் அரி­ஃபின் நேற்று 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தா­ளி­டம் கூறி­னார்.

இருப்­பி­னும் அவர்­கள் எப்­போது விடு­விக்­கப்­பட்­ட­னர் என்ற விவ­ரத்தை அவர் வெளி­யிட மறுத்­தார். மேலும், அவ்­வி­ரு­வர் மீதும் குற்­றச்­சாட்டு பதி­வு­செய்­யப்­ப­ட­வில்லை என்­றார் அந்த அதி­காரி.

சம்­ப­வம் தொடர்­பான விசா­ரணை அறிக்­கை­கள் அர­சாங்க வழக்­க­றி­ஞ­ரி­டம் சமர்ப்­பிக்­கப்­பட்­ட தாக உதவி ஆணை­ய­ரான திரு ரஹ்­மத் தெரி­வித்­தார். எந்த குற்­றத்­தின் அடிப்­ப­டை­யில் விசா­ரணை நடத்­தப்­பட்­டது என்று காவல்­துறை தெரி­விக்­க­வில்லை. குறும்­புத்­த­னத்­தில் ஈடு­பட்­ட­தற்­காக அவ்­வி­ரு­வ­ரை­யும் காவல்­துறை தேடி­ய­தாக முன்­னர் வந்த செய்­தி­கள் தெரி­வித்­தன.

பிணை­யில் இருக்­கும் காலத்­தில் இரு­வ­ரும் காவல்­து­றை­யு­டன் தொடர்­பில் இருக்­க­வேண்­டும், எப்­போது அழைத்­தா­லும் வர­வேண்­டும் என்ற நிபந்­த­னை­கள் விதிக்­கப்­பட்டு உள்­ளன. ஜூலை 14ஆம் தேதி இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர். 10ஆம் தேதி சம்­ப­வம் நடை­பெற்­றது. தங்­க­ளது காரில் இருந்து இறங்­கிய இரு­வ­ரும் சாலை­யில் நின்­ற­வாறு மற்­றொரு காருக்­குள் இருந்­த­வரை நோக்கி ஏதேதோ பேசி தக­ராற்­றில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.