சிங்கப்பூரில் சிங்கப்பூர்-ஜோகூர் விரைவு ரயில் முனையம் அமையவிருக்கும் உட்லண்ட்ஸ் நார்த் கட்டுமானத் தளத்தில் ஜோகூர் சுல்தானை வரவேற்றார் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன்.
அங்கு 'கொன்டிரோல்ட் பிளாஸ்டிங்' முறைப்படி பாறைகளை அகற்றப்படுவதை அவர்கள் பார்வையிட்டனர். அங்கே நடைபெறவுள்ள கட்டுமானப் பணிகள் குறித்தும் அவர்களுக்கு கட்டுமான ஒப்பந்ததாரர்கள் விளக்கினர்.
ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர், தன் துணைவியார் ராஜா சரித் சோஃபியா, பட்டத்து இளவரசர் இஸ்மாயில், அவரின் மனைவியான கலிடா, ஜோகூர் முதல்வர் ஓன் ஹனிஃப் காஸி, இதர அதிகாரிகளுடன் மூன்று நாள் வருகை மேற்கொண்டு சிங்கப்பூர் வந்திருக்கிறார்.
ஜோகூர் சுல்தான் சிங்கப்பூருக்கு மேற்கொண்டுள்ள முதலாவது அதிகாரபூர்வ பயணம் இதுவாகும்.
சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் ரயில் முனையத்தையும் மலேசியாவின் ஜோகூரில் உள்ள புக்கிட் சாகர் நிலையத்தையும் இணைக்கும் 4 கிலோமீட்டர் தூர ரயில் தடம் சிங்கப்பூர்-ஜோகூர் விரைவு ரயில் திட்டம். வரும் 2026ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் இந்த ரயில்திட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு 10,000 பயணிகள் சிஙப்பூரிலிருந்து ஜோகூருக்கும் அங்கிருந்து இங்கும் பயணம் செய்ய முடியும்.பயண நேரம் சுமார் 5 நிமிடம்தான்.

