சென்ற மாதம் வெளியான காணொளியில் மாணவ தொண்டர்கள் போல் நடித்து குடியிருப்பு பேட்டை வாசிகளிடம் நன்கொடை கேட்ட இரண்டு கடற்படை அதிகாரிகள் மதுவின் தாக்கத்தால் அவ்வாறு செய்துள்ளனர்.
குடியிருப்பாளர் ஒருவர் எடுத்த காணொளியில் ஜூன் 25-ஆம் தேதியன்று மாணவர்களை போல் நடித்து நள்ளிரவில் நன்கொடை கேட்ட இருவரும் கடற்படை அதிகாரிகள் என்று தெரியவந்தது. இச்சம்பவம் குறித்த விசாரணை முடிவடைந்ததை வியாழக்கிழமை (ஜூலை 21) ஃபேஸ்புக் இணையத்தளத்தில் பதிவிட்ட தற்காப்பு அமைச்சு அவ்விருவரும் தங்கள் செயல்களை எண்ணி வருத்தம் தெரிவித்ததையும் பதிவிட்டது.

