டாக்சி கட்டண உயர்வு டிசம்பர் 31ஆம் தேதி வரை தொடரும்

டாக்சி கட்டண உயர்வு டிசம்பர் 31ஆம் தேதி வரை தொடரும்

2 mins read
01a004aa-5bad-4e02-8a2d-1d9549fa7c54
-

டாக்சி நிறு­வ­னங்­கள் தற்­போது அறி­விக்­கப்­பட்­டுள்ள தற்­கா­லி­கக் கட்­டண உயர்வு இந்த ஆண்டு டிசம்­பர் 31ஆம் தேதி வரை தொட­ரும் என்று தெரி­வித்­துள்­ளன.

பய­ணத் தொலைவு, காத்­தி­ருக்­கும் நேரம் ஆகி­ய­வற்­றுக்­கான கட்­ட­ணங்­கள் ஒரு காசு உயர்த்­தப்­படுவதாக கடந்த ஏப்­ரல் மாதம் அறி­விக்­கப்­பட்­டது. எரி­பொ­ருள் விலை உயர்­வால் சிர­மப்­படும் டாக்சி ஓட்­டு­நர்­க­ளுக்கு இது கைகொ­டுக்­கும் என்று கரு­தப்­ப­டு­கிறது.

'எஸ்­எம்­ஆர்டி' நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மான 'ஸ்டி­ரைட்ஸ்' டாக்சி நிறு­வ­னம் இந்த நீட்­டிப்பு குறித்து நேற்று அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டது. சென்ற வாரம் இதே­போன்ற அறி­விப்பை, 'பிரி­மி­யர்' டாக்சி நிறு­வ­னம் அதன் இணை­யத் தளத்­தில் வெளி­யிட்­டி­ருந்­தது.

இதர மூன்று டாக்சி நிறு­வ­னங்­க­ளான 'கம்­ஃபர்ட் டெல்­குரோ', 'டிரான்ஸ் கேப்', 'பிரைம் டாக்சி' ஆகி­ய­வை­யும் தங்­கள் கட்­டண உயர்வை இவ்­வாண்டு இறு­தி­வரை நீட்­டிப்­ப­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­தன.

முன்­ன­தாக எரி­பொ­ருள் விலை குறைந்த பிறகோ சென்ற மே மாதமோ தற்­கா­லி­கக் கட்­டண உயர்வு மீட்­டுக்­கொள்­ளப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் தொடர்ந்து எரி­பொ­ருள் விலை அதி­க­மாக இருந்­த­தால், இம்­மாத இறு­தி­வரை கட்­டண உயர்வு தொட­ரும் என்று கூறப்­பட்­டது.

தற்­கா­லி­கக் கட்­டண உயர்­வின்­கீழ் வழக்­க­மான டாக்சி சேவை­களை நாடும் பய­ணி­கள் ஒவ்­வொரு 400 மீட்­டர் தொலை­விற்­கும் 25 காசு செலுத்த வேண்­டும். இது முதல் பத்து கிலோ­மீட்­டர் தொலை­விற்­குப் பொருந்­தும். அதன் பிறகு அடுத்த பத்து கிலோ­மீட்­டர் தொலை­விற்கு ஒவ்­வொரு 350 மீட்­ட­ருக்­கும் 25 காசு செலுத்த வேண்­டும். காத்­தி­ருக்­கும் நேரத்­தில் ஒவ்­வொரு 45 விநாடி அல்­லது அதற்­குக் குறை­வான நேரத்­திற்கு 25 காசு செலுத்த வேண்­டும்.

கடந்த ஏப்­ரல் மாதத்­திற்கு முன்­னர், இது 24 காசாக இருந்­தது.

சொகுசு வாடகை கார்­க­ளுக்கு கட்­ட­ணத் தொகை மாறு­படும்.

சிங்­கப்­பூ­ரர்­கள் பண­வீக்­கத்­தைச் சமா­ளிக்க உத­வும் நோக்­கில் அறி­விக்­கப்­பட்ட ஒன்­றரை பில்­லி­யன் வெள்ளி ஆத­ர­வுத் திட்­டத்­தின்­கீழ், டாக்­சி­யில் பய­ணம் செய்­வோ­ருக்­கான வழங்­கு­தொ­கை­யும் அடங்­கும். அர­சாங்­கம் தகு­தி­பெ­று­வோ­ருக்கு ஒரு­முறை மட்­டும் அளிக்­கப்­படும் வழங்­கு­தொ­கை­யாக 150 வெள்ளி வழங்­கும்.

அடுத்த மாதம் இந்­தத் தொகை வழங்­கப்­ப­ட­வி­ருக்­கிறது.