தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஒத்திவைக்கக் கோரி சிறைக் கைதி ஒருவர் செய்த விண்ணப்பத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக 64 வயது நசேரி லிஜிம் இன்று தூக்கிலிடப்படுவார்.
இந்நிலையில், மரண தண்டனை விதிக்கக்கூடிய குற்றச்சாட்டை தம்மீது சுமத்த அரசாங்க வழக்கறிஞர்கள் எடுத்த முடிவு, அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் தமக்கு இருக்கும் உரிமை மறுக்கப்பட்டதாக நசேரி தமது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.
தம்மைப் பிரதிநிதிக்க வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க ஓரிரு நாள்கள் அவகாசம் வழங்கும்படி அவர் மேல்முறையீட்டு நிதிமன்றத்திடம் நேற்று கேட்டுக்கொண்டார்,
மேலும், தமது சகோதரர்களில் சிலர் சிங்கப்பூரில் இல்லை என்றும் அவர்களை இன்னும் பார்க்கவில்லை என்றும் நசேரி கூறினார்.
ஆனால் நீதிமன்ற செயல்
முறையை நசேரி தவறான முறையில் பயன்படுத்துவதாகக் கூறிய நீதிபதி விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்தார். வழக்கு விசாரணையின்போது நசேரியை வழக்கறிஞர் பிரதிநிதித்ததாகவும் தம்மைத் தற்தாத்துக்கொள்ள அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதாகவும் நீதிபதி தெரிவித்தார். கடத்தல் நோக்கத் துடன் குறைந்தது 33.39 கிராம் எடை கொண்ட போதைமிகு அபின் வைத்திருந்த குற்றத்துக்காக 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நசேரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து அவர் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் செய்த மேல்முறையீடு
தள்ளுபடி செய்யப்பட்டது.

