மாணவர்களைப் போல பாசாங்கு செய்து நன்கொடை கேட்ட கடற்படை வீரர்கள் இருவரும் குடிபோதையில் இருந்தனர்

மாண­வர்­க­ளைப் போல பாசாங்கு செய்து வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கக் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளி­டம் நன்­கொடை திரட்ட முயன்ற இரண்டு கடற்­படை வீரர்­கள், சம்­ப­வம் நிகழ்ந்­த­போது குடி­போ­தை­யில் இருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த மாதம் 25ஆம் தேதி அதி­காலை மாண­வத் தொண்­டூ­ழி­யர்­கள் எனக் கூறிக்­கொண்டு அந்த இரு­வ­ரும் நன்­கொடை கேட்­பதை குடி­யி­ருப்­பா­ளர் ஒரு­வர் காணொளி எடுத்­தார்.

அந்­தக் குடி­யி­ருப்­பா­ளர் நன்­கொடை வழங்­க­வில்லை.

பொய் சொல்லி நன்­கொடை கேட்ட இரு­வ­ரும் முழு­நேர கடற்­படை வீரர்­கள் என விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.

தங்­கள் தவற்­றுக்கு இரு­வ­ரும் வருத்­தம் தெரி­வித்­தி­ருப்­ப­தாக தற்­காப்பு அமைச்சு அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று பதி­விட்­டது.

"சிங்­கப்­பூர் கடற்­படை வீரர்­கள் உயர்­தர ஒழுக்­கம், நாண­யம் ஆகி­ய­வற்­றைக் கொண்­ட­வர்­க­ளாக இருக்க வேண்­டும். அவர்­கள் சட்­டத்தை மதிப்­ப­வர்­க­ளாக இருக்க வேண்­டும்.

"சம்­பந்­தப்­பட்ட இரு­வ­ருக்கு எதி­ராக இம்­மா­தம் 20ஆம் தேதி­யன்று வழக்கு விசா­ரணை நடத்­தப்­பட்­டது. அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அதில் அப­ரா­த­மும் அடங்­கும்," என்று தற்­காப்பு அமைச்சு கூறி­யது.

குடிபோதையில் மாணவர்களைப் போல பாசாங்கு செய்து நன்கொடை கேட்டவர்களைக் காணொளி எடுத்த குடியிருப்பாளர்.

படம்: சாவ் பாவ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!