சாங்கி விமான நிலையத்தின் 4வது முனையம் செப்டம்பர் 13 அன்று திறக்கப்படும் என சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் முனையம் திறக்கப்படுவதாகக் கூறப்பட்டது. கொவிட்-19 தொற்று காரணமாக முனையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் 16 மில்லியன் பயணிகளை 4வது முனையம் கையாளமுடியும் என குழுமம் கூறியது. 16 விமான சேவைகள் 4வது முனையத்துக்கு மாற்றிவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஏர் ஏசியா, கொரியன் ஏர், சிபு பசிஃபிக், கேத்தே பசிஃபிக், ஜெட்ஸ்டார் உள்ளிட்டவை படிப்படியாக 4வது முனையத்துக்கு மாற்றிவிடப்படும்.

