பதினெட்டு வருடங்களுக்கு பின் மூடவிருக்கும் ஓஜி

தி சென்டர்பாயிண்ட் மற்றும் அர்ச்சர்ட் பிளாசா இடையில் இயங்கிக்கொண்டிருக்கும் ஆர்ச்சர்ட் பாயிண்டிலுள்ள ஓஜி பல்பொருள் அங்காடி பதினெட்டு வருடங்களுக்கு பின் இவ்வாண்டு அக்டோபர் மாதம் மூடவிருக்கிறது.

ஓஜி மூடிய பின்னர் அவ்விடத்தில் புதிய உணவு மற்றும் மளிகை சாமான் கடை திறக்கப்படவிருக்கிறது. புதிதாக அமையவிருக்கும் கடையின் பெயரை ஓஜி வெளிப்படுத்தவில்லை.


இதையடுத்து, கடைப்பொருட்களின் விற்பனை விலைகளில் 90 சதவீதம் வரை சலுகைகளை எதிர்பார்க்கலாம் என ஓஜி தன் பேஸ்புக் பக்கத்தில் வியாழக்கிழமை (ஜூலை 21) அன்று பதிவிட்டிருக்கிறது. தங்கள் நீண்ட கால திட்டத்தின் கீழ் புறநகர பகுதிகளிலுள்ள வாடிக்கையாளர்களுக்காக இன்னும் கூடுதலான கடைத்தொகுதிகளை திறக்கலாமென திட்டமிட்டுக் கொண்டிருப்பதாக ஃபேஸ்புக் பக்க கருத்துக்களில் ஓஜி தெரிவித்துள்ளது.


சிங்கப்பூரில் 1960-களில் வியாபாரத்தைத் தொடங்கிய ஓஜி 2003-இல் ஆர்ச்சர்ட் பாயிண்ட் கட்டிடத்தை வாங்கி புதுப்பிப்புப் பணியை மேற்கொண்டது. அதன் பிறகு, 2004-இல் ஓஜி ஆர்ச்சர்ட் பாயிண்ட் திறக்கப்பட்டது. இந்த கடைத்தொகுதியைத் தவிர்த்து, ஆல்பர்ட் காம்ப்ளெக்சிலும் பீபள்ஸ் பார்க்கிலும் ஓஜி இயங்கிக்கொண்டு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!