வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை 2.8 விழுக்காடு உயர்ந்தது

வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை 2.8 விழுக்காடு உயர்ந்தது

1 mins read
416940c4-afcc-46b6-900f-0ef28167483a
-

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக (வீவக) மறு­விற்­பனை வீட்டு விலை தொடர்ந்து ஒன்­ப­தா­வது காலாண்­டாக உயர்ந்­துள்­ளது.

அதே வேளை­யில் விற்­கப்­பட்ட வீடு­க­ளின் எண்­ணிக்கை குறைந் துள்ளது.

இவ்­வாண்­டின் இரண்­டா­வது காலாண்­டில் வீவக மறு­விற்­பனை வீட்டு விலை 2.8 விழுக்­காடு உயர்ந்­தது. இது முதல் காலாண்­டில் இருந்த 2.4 விழுக்­காட்டு உயர்­வை­விட அதி­கம்.

வீவக மறு­விற்­பனை வீட்டு விலை­கள் உச்ச அள­வில் இருப்­ப­தால் இந்த உயர்வு ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என்று பிராப்­பர்டி குரு சிங்­கப்­பூர் நிறு­வ­னத்­தின் நிர்­வாகி டான் டீ கூன் கூறி­னார்.

தேவைக்­­கேற்ப கட்­டப்­படும் வீடு­க­ளின் கட்­டு­மா­னத்­தில் நில­வும் தாம­தம், பெரிய வீடு­களை வாங்க விருப்­பம் போன்ற கார­ணங்­க­ளால் மறு­விற்­பனை வீடு­கள் ஏற்­றம் காண­லாம் என்று அவர் தெரி­வித்­தார்.

ஆனால் சிஓவி எனப்­படும் கூடு­தல் ரொக்­கத் தொகை அளிக்­கா­மல் வீட்­டின் மதிப்­பு­வி­லையை மட்­டும் செலுத்­தும் பரி­வர்த்­த­னை­கள் அதி­க­ரித்து வரு­வதை ஹட்­டன்ஸ் ஏஷியா நிறு­வ­னத்­தின் மூத்த ஆய்வு இயக்­கு­நர் லீ சு டெக் சுட்­டிக்­காட்­டி­னார்.

இரண்­டாம் காலாண்­டில் 6,819 வீவக மறு­விற்­பனை வீடு­கள் விற்­கப்­பட்­டன. இது முதல் காலாண்­டில் விற்­கப்­பட்ட 6,934 வீடு­க­ளை­விட 1.7 விழுக்­காடு குறை­வா­கும்.

விற்­கப்­பட்ட வீடு­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து மூன்­றா­வது காலாண்­டாக குறைந்­துள்­ளது.