தனியார் வீடுகளின் விலை இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 3.5 விழுக்காடு கூடியது.
இரண்டாம் காலாண்டில் தனியார் வீட்டு விலை 3.2 விழுக்காடு உயரும் என்ற நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் முன்னுரைப்பை மிஞ்சிய உயர்வு இது.
மேலும் முதல் காலாண்டில் தனியார் வீடு களின் விலை 0.7 விழுக்காடு மட்டுமே உயர்ந்தது.
நகரத்தின் சுற்றுவட்டத்திலும் நல்ல இடங்களிலும் உள்ள தனியார் வீடுகளின் விலை உயர்ந்தது.
குறிப்பாக முதல் காலாண்டில் குறைந்திருந்த தரை வீடு தவிர்த்த மற்ற தனியார் வீடுகளின் விலை 3.6 விழுக்காடு அதிகரித்தது.
தரை வீடுகளின் விலை இரண்டாம் காலாண்டில் 2.9 விழுக்காடு உயர்ந்தது.

