பலதுறை மருந்தகங்களில் 80 வயதினருக்கு மட்டுமே முன்பதிவு இல்லாமல் தடுப்பூசி

பல­துறை மருந்­த­கங்­களில் கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள விரும்­பும் 80 வய­துக்­கும் குறைந்­த­வர்­கள் இனி அதற்கு முன்­ப­திவு செய்­து­கொள்ள வேண்­டும். சுகா­தார அமைச்சு நேற்று இதைத் தெரி­வித்­தது. இங்­குள்ள 23 பல­துறை மருந்­த­கங்­களும் உட­னடி சிகிச்சை தேவைப்­படும் நோயா­ளி­களை மேலும் சிறப்­பாக சிகிச்சை அளிக்க இது உத­வும் என்று அமைச்சு கூறி­யது.

கடந்த இரண்டு வாரங்­க­ளாக, கொவிட்-19 தொற்று உள்­ளிட்ட கடும் சுவாசப் பிரச்­சி­னை­க­ளுக்­காக பல­துறை மருந்­த­கங்­களில் சிகிச்சை பெறும் நோயா­ளி­க­ளின் அன்­றாட சரா­சரி எண்­ணிக்கை கணி­ச­மாக உயர்ந்­துள்­ளது என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

இத­னால் 80 வயது அல்­லது அதற்கு மேற்­பட்ட வய­துள்ள முதி­ய­வர்­கள் மட்­டுமே முன்­ப­திவு செய்­யா­மல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள பல­துறை மருந்­த­கங்­க­ளுக்­குச் செல்­ல­லாம் என்றது அமைச்சு.

தீவின் பத்து இடங்­களில் அமைக்­கப்­பட்­டுள்ள கிரு­மிப் பரி­சோ­தனை, தடுப்­பூ­சிக்­கான கூட்டு நிலை­யங்­க­ளுக்குப் பொது­மக்­கள் சென்று தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாம். இந்த நிலை­யங்­க­ளுக்கு செல்ல முன்­ப­திவு தேவை­யில்லை.

இதற்­கி­டையே மருத்­து­வ­ம­னை­களில் பெரி­ய­வர்­க­ளுக்­கான அவ­சர சிகிச்­சைப் பிரி­வு­களில் கடந்த வாரங்­க­ளாக தின­மும் சரா­ச­ரி­யாக 2,500 நோயா­ளி­கள் சிகிச்சை பெறு­கின்­ற­னர். வழக்­க­மாக அன்­றா­டம் 2,000 நோயா­ளி­க­ளைத்­தான் அவ­சர சிகிச்­சைப் பிரி­வு­கள் கையா­ளும் என்று அமைச்சு குறிப்பிட்டது.

கேகே மக­ளிர் சிறார் மருத்­து­வ­மனை, தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வமனை ஆகி­ய­வற்­றில் உள்ள அவ­சர சிகிச்­சைப் பிரி­வு­களில் கடந்த இரண்டு வாரங்­க­ளாக தின­மும் 680 நோயா­ளி­கள் சிகிச்சை பெறு­கின்­ற­னர். வழக்­க­மாக இந்த எண்­ணிக்கை நாளுக்கு 450ஆக இருக்­கும் என்று அமைச்சு கூறி­யது.

இவற்­றில் 40 விழுக்­காட்­டுச் சம்­ப­வங்­களில் அவ­சர சிகிச்சை தேவைப்­ப­ட­வில்லை என்­றும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

நெஞ்சு வலி, மூச்­சுத்­தி­ண­றல், கட்­டுக்­க­டங்­காத ரத்­தக் கசிவு போன்ற கடு­மை­யான அல்­லது உயி­ருக்கு ஆபத்­துள்ள அவ­ச­ர­நி­லை­ க­ளுக்கு மட்­டுமே மருத்­து­வ­மனை அவ­சர சிகிச்­சைப் பிரி­வு­களில் சிகிச்சை பெறும்­படி அது பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டது.

அத்­து­டன், ஜூரோங், ஈசூன் பல­துறை மருந்­த­கங்­களில் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் நோவோ­வேக்ஸ் தடுப்­பூசி மட்­டுமே வழங்­கப்­படும் என்று அமைச்சு தெரி­வித்­தது. தற்­போது அங்கு ஃபைசர் தடுப்­பூ­சி­யும் போடப்­ப­டு­கிறது.

ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை­தான் அங்கு ஃபைசர் தடுப்­பூ­சியை இரண்­டா­வது தடுப்­பூசி அல்­லது இரண்­டா­வது பூஸ்­டர் தடுப்­பூசியாக போட்­டுக்­கொள்ள முடி­யும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!