மூடப்படவுள்ள ஆர்ச்சர்ட் ‘ஓஜி’ கடைத்தொகுதி

ஆர்ச்­சர்ட் சாலை­யில் 18 ஆண்­டு­களாக இயங்­கி­வ­ரும் 'ஓஜி' சில்­லறை வர்த்­தக நிறு­வ­னத்­தின் 'ஓஜி ஆர்ச்­சர்ட் பாயிண்ட்' கடைத்­தொ­குதி வரும் அக்­டோ­பர் மாதம் மூடப்­ப­ட­வுள்­ளது. அதை­யொட்டி இக்­க­டை­யில் கழிவு விலை­யில் பொருள்­கள் விற்­கப்­படும் என்று 'ஓஜி' தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று முன்­தி­னம் அறி­வித்­திருந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று 'ஓஜி ஆர்ச்­சர்ட் பாயிண்ட்'டிற்கு வாடிக்­கை­யா­ளர்­கள் திர­ளா­கச் சென்­ற­னர். காலை 11 மணிக்­குக் கடைத்­தொ­குதி திறக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு அதன் இரண்டு நுழை­வா­யில்­கள் ஒவ்­வொன்­றுக்­கும் வெளியே சுமார் 50 பேர் வரி­சை­யில் நின்­ற­னர்.

வாடிக்­கை­யா­ளர்­களில் பெரும்­பா­லோர் கடைத்­தொ­கு­தி­யின் பெண்­கள் ஆடை­கள் விற்­கப்­படும் முதல் தளத்­திற்­கும் வீட்­டுக்­குத் தேவை­யான பொருள்­கள், மின்­சா­ரப் பொருள்­கள் ஆகி­யவை விற்­கப்­படும் நான்­காம் தளத்­திற்­கும் சென்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

'ஓஜி ஆர்ச்­சர்ட் பாயிண்ட்' இருக்­கும் பகு­தி­யில் இனி காய்­கறி, இறைச்சி வகை­கள், மளி­கைப் பொருள்­கள் உள்­ளிட்­ட­வற்றை விற்­கும் கடை ஒன்று அமை­யும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அக்­க­டை­யின் யெரை 'ஓஜி' வெளி­யி­ட­வில்லை.

ஆகக் கடைசி நில­வ­ரப்­படி 'ஓஜி ஆர்ச்­சர்ட் பாயிண்ட்'டில் வேலை செய்­யும் ஊழி­யர்­க­ளின் நிலை குறித்து அவர்­க­ளுக்கு எவ்­விதத் தக­வ­லும் அளிக்­கப்­ப­ட­வில்லை என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் பேசிய சில ஊழி­யர்­கள் கூறி­னர்.

'ஆல்­பர்ட் பார்க் காம்­பி­ளக்ஸ்' நிலை­யம், 'பீப்­பல்ஸ் பார்க்' ஆகி­ய­வற்­றி­லும் 'ஓஜி' கிளைகளை இயக்­கு­கிறது. 'ஓஜி ஆர்ச்­சர்ட் பாயிண்ட்' ஊழி­யர்­கள் அவற்­றுக்கு அனுப்­பப்­படு­வர்; ஆனால் விளம்­ப­ரப் பணி­யில் ஈடு­ப­டு­வோ­ரின் நிலை என்­ன­வென்று தெரி­ய­வில்லை என இங்கு 18 ஆண்­டு­க­ளாக வேலை செய்து வரும் ஒரு விளம்­ப­ரப் பணி­யா­ளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

சிங்­கப்­பூ­ரில் ஏற்­கெ­னவே பிர­பல சில்­லறை வர்த்­த­கக் கடை­களான 'ராபின்­சன்ஸ்', 'ஈசேட்­டான்' ஆகி­யவை மூடப்­பட்­டன. 'ராபின்­சன்ஸ்' முழு­மை­யாக மூடப்­பட்­டது. ஜூரோங் ஈஸ்ட், பார்க்வே பரேட் கடைத்­தொ­குதி ஆகி­ய­வற்­றில் இருந்த ஜப்பானின் 'ஈசேட்­டான்' நிறு­வ­னத்­தின் கிளைகள் கடந்த ஈராண்டுகளில் மூடப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!