$6.1 மி. மோசடி: 343 பேரிடம் விசாரணை

$6.1 மி. மோசடி: 343 பேரிடம் விசாரணை

2 mins read
ea5b8925-070e-4001-9d7a-74d6e9fbd240
-

சிங்­கப்­பூ­ரில் 6.1 மில்­லி­யன் வெள்ளி அள­விற்கு நடை­பெற்ற மோச­டி­யின் தொடர்­பில் 343 பண­மோ­ச­டிப் பேர்­வ­ழி­க­ளி­டம் காவல்­துறை விசா­ரணை நடத்­து­கிறது. வர்த்­த­கக் குற்ற விசா­ர­ணைப் பிரி­வும் சிங்­கப்­பூர் காவல்­து­றை­யும் இணைந்து இம்­மா­தம் எட்­டாம் தேதி முதல் 21ஆம் தேதி­வரை நடத்­திய இரண்டு வார தீவு தழு­விய பண மோசடி ஒழிப்பு நட­வ­டிக்­கை­யைத் தொடர்ந்து விசாரணை மேற்­கொள்ளப்­ப­டு­கிறது.

14லிருந்து 78 வய­துக்கு உள்­பட்ட சந்­தேக நபர்­களில் 236 ஆண்­களும் 107 பெண்­களும் அடங்­கு­வர். அவர்­கள் இணை­யக் காதல், மின் வர்த்­த­கம், ஆள்­மா­றாட்­டம், முத­லீடு, வேலை, கடன் மோசடி போன்ற 857க்கும் அதி­க­மான வழக்கு­களில் ஈடு­பட்­டி­ருந்­தது தெரி­ய­வந்ததென காவல்­துறை நேற்று தெரி­வித்­தது.

கள்­ளப் பணத்தை நல்­லப் பண­மாக்குவது தொடர்­பான குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் 10 ஆண்­டு­கள் வரை சிறைத்­தண்­டனை, 500,000 வெள்ளி வரை­யி­லான அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம். சிங்­கப்­பூ­ரில் உரி­மம் பெறாத எந்­த­வொரு பணம் வழங்­கும் சேவை தொடர்­பான குற்­றத்­திற்­கும் 125,000 வெள்­ளிக்­குக் குறை­யாத அப­ரா­தம், குறைந்­த­பட்­சம் மூவாண்­டுச் சிறைத் தண்­டனை அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.

சென்ற ஆண்டு சிங்­கப்­பூ­ரில் பண மோச­டிச் செயல்­க­ளின் மூலம் 633 மில்­லி­யன் வெள்ளி பறிக்­கப்­பட்­டது. இந்­தத் தொகை, 2020ஆம் ஆண்டு பறி­போன 268.4 மில்­லி­யன் வெள்­ளி­யைக் காட்­டி­லும் கிட்­டத்­தட்ட இரண்­டரை மடங்கு அதி­கம்.

சிங்­கப்­பூ­ரில் இடம்­பெ­றும் பண மோச­டி­களில் 90 விழுக்­காடு வெளி­நா­டு­களில் திட்­ட­மி­டப்­பட்டு, தொழில்­நுட்­பத்­தில் கைதேர்ந்­தோ­ரால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இவ்வாரத் தொடக்­கத்­தில் சிங்­கப்­பூ­ரும் ஆஸ்­தி­ரே­லி­யா­வும் பண மோசடி அழைப்­பு­கள், குறுந்­த­க­வல்­கள் ஆகி­ய­வற்­றின் தொடர்­பி­லான விசா­ர­ணை­களில் உத­விக்­கொள்ள வகை­செய்­யும் உடன்­ப­டிக்­கை­யில் கையெ­ழுத்­திட்­டன.