மின் தகவல் கசிவின் தொடர்பில் கணினி விளையாட்டு நிறுவனமான 'ரேஸர்' தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் மீது குறைந்தது 9.7 மில்லியன் வெள்ளி இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்திருந்தது. அந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை திட்டமிடப்பட்டதைவிட விரைவிலேயே நிறைவடைந்தது.
தகவல் கசியக் காரணமாக இருந்த பாதுகாப்பு அத்துமீறலுக்கு தானே பொறுப்பு என்று வழக்கு தொடரப்பட்ட 'கேப்ஜெமினை' நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒப்புக்கொண்டதால் இந்நிலை உருவானது.
அதனால் தொழில்நுட்ப வல்லுநர்கள் சாட்சியம் அளிக்கத் தேவையில்லை என்று நீதிபதி லீ சியூ கின் கூறினார். இம்மாதம் 29ஆம் தேதியன்று அவர்கள் சாட்சியம் அளிப்பதாக இருந்தது.
எழுத்து வடிவில் இறுதி வாதத்தை சமர்ப்பிக்க வழக்கு அடுத்த மாதம் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

