அணுவாயுத ஆற்றலைக் கொண்ட அமெரிக்கக் கடற்படையின் 'யுஎஸ்எஸ் ரோனல்ட் ரீகன்' விமானந்தாங்கிக் கப்பல் சிங்கப்பூரின் சாங்கி கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவைச் சேர்ந்த விமானந்தாங்கிக் கப்பல் ஒன்று சிங்கப்பூரில் நிறுத்தப்படுவது இதுவே முதல்முறை.
அத்தியாவசியப் பொருள்களை மீண்டும் நிரப்பிக்கொள்ள துறைமுகங்களில் கப்பல் நிறுத்தப்படுவதுண்டு. அந்த வகையில் இக்கப்பல் சிங்கப்பூரில் சில நாள்களுக்கு இருக்கும். இதில் உள்ளவர்களும் சிங்கப்பூரில் ஓய்வெடுத்துக்கொள்வர்.

