சிங்கப்பூரில் ஆறு பேருக்கு ஓமிக்ரான் கிருமியின் புதிய திரிபு உறுதி

சிங்கப்பூரில் ஆறு பேருக்கு ஓமிக்ரான் கிருமியின் புதிய திரிபு உறுதி

1 mins read
d904f0d8-5c54-4150-bb48-149116e1b385
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் ஆறு பேருக்கு ஓமிக்ரான் கிருமியின் புதிய திரிபு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு பிஏ.2.75 எனும் புதிய திரிபு தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. ஏற்கனவே வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த இருவருக்கு அந்தக் கிருமி தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டத்தை தொடர்ந்து, அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டதாக அமைச்சு குறிப்பிட்டது.

புதிய திரிபு முதன்முறையாக இந்தியாவில் மே மாதம் கண்டறியப்பட்டது. புதிய திரிபு மிக எளிதில் பரவக்கூடியது என்றும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் இக்கிருமி தொற்றும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் மூவர் உயிரிழந்தனர். இதுவரை தொற்றுப் பாதிப்பால் 1,468 மரணங்கள் பதிவாகியுள்ளன. வெள்ளிக்கிழமை (ஜூலை 22) நிலவரப்படி, கொவிட்-19க்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 758ஆக உள்ளது. இவர்களில் 14 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் 68 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

வாராந்திர தொற்றுப் பரவல் விகிதம் 1.02ஆக இருந்தது.