ராஃபிள்ஸ் பள்ளி மதியுரைத் திட்டம் விரிவடையும்

ராஃபிள்ஸ் பள்ளி மதியுரைத் திட்டம் விரிவடையும்

1 mins read
287fa7d8-2617-41ce-ab06-d3b1fddc0a9c
-

ராஃபிள்ஸ் பள்ளி அடுத்த ஆண்டில் தனது மதியுரைத் திட்டத்தை விரிவுபடுத்துகிறது என்று அந்தப் பள்ளி முதல்வர் ஃபிரடரிக் இயோ நேற்று அறிவித்தார்.

அந்தத் திட்டத்தின்படி தங்கள் பள்ளிக்கூடங்களில் இருந்து நிதி உதவிபெறும் தொடக்கநிலை நான்கு முதல் ஆறு வரைப்பட்ட மாணவர்களுக்கு கல்வி தொடர்பான மதியுரையை வழங்கி ராஃபிள்ஸ் பள்ளி மாணவர்கள் உதவுவார்கள்.

அந்தப் பள்ளியின் 199வது நிறுவனர் தினம் நேற்று நடந்தது. அதில் அந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.