மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனம் அங் மோ கியோ ஸ்திரீட் 23ல் உள்ள புளோக் 227ல் நடத்தும் புதிய பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ் பாலர் பள்ளி நேற்று அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டது.
டெக் கீ பகுதியில் செயல்படும் இத்தகைய முதல் பாலர் பள்ளி இதுவே ஆகும்.
பிரதமரும் அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பிரதமர் லீ சியன் லூங் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிள்ளைகளுடன் கலந்துறவாடினார்.
அந்த டெக் கீ பாலர் பள்ளி இந்த ஆண்டு ஜனவரியில் செயல்படத் தொடங்கியது.
அது மசெக சமூக அறநிறுவனம் நடத்தும் 44 பாலர் பருவ நிலையங்களில் ஒன்றாகும்.
அவை, பிறந்து இரண்டு மாதங்கள் ஆகும் கைக்குழந்தைகள் முதல் நான்கு வயது வரைப்பட்ட பிள்ளைகளுக்கு முழுநேர பராமரிப்புச் சேவைகளை வழங்குகின்றன. டெக் கீ நிலையம் 17 கைக்குழந்தைகளுக்கும் 106 சிறாருக்கும் சேவை வழங்குகிறது.
டெக் கீ பாலர் பள்ளி, அங் மோ கியோவில் இருக்கும் கல்வி அமைச்சு பாலர் பள்ளிக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது.

