இல்லப் பணிப்பெண்களும் அவர்களது முதலாளிகளும் உதவியோ ஆலோசனையோ பெற இனிமேல் புதிய நிலையம் ஒன்றை நாடலாம்.
இந்த இல்லப்பணிப்பெண்களுக்கான நிலையம் (Centre for Domestic Employees -CDE) தெம்பனிஸ் ஜங்க்ஷன் கட்டடத்தில் இன்று (ஜூலை 24) திறக்கப்பட்டது.
ஏற்கெனவே 75 பாசிர் பாஞ்சாங் ரோட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு நிலையம் நிறுவப்பட்டது.
இந்த நிலையங்கள் இல்லப் பணிப்பெண்களும் அவர்களது முதலாளிகளும் வேலை தொடர்பான உதவிகளைப் பெற தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் உருவாக்கிய திட்டங்களில் ஒன்று.
இரண்டு நிலையங்களிலும் இல்லப்பணிப்பெண்கள் வார இறுதிகளில் சென்று ஓய்வு எடுக்கலாம், பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈட்படலாம்.
தெம்பனிசில் உள்ள அந்த நிலையத்தை மனிதவள அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் நேற்று பார்வையிட்டார்.