அண்மையில் பொங்கோல் மற்றும் கிளெமெண்டி வீடமைப்புப் பேட்டைகளில் அழையா விருந்தாளிகளாக ஒரு குரங்குக் கூட்டம், அக்கம்பக்கங்களில் சுற்றித் திரிந்ததோடு சில வீடுகளுக்குள்ளும் நுழைந்தன.
தேசிய பூங்காக் கழக, வன உயிரிகள் நிர்வாகக் குழு இயக்குநர், மருத்துவர் அட்ரியன் லூ, இந்த நீண்டவால் குரங்குகள் குடியிருப்புகளை அண்டாமல் இருப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.
சிலர் உணவளிப்பது, உணவைத் தேடி வீட்டிற்கு நுழையலாம் என்ற அவற்றின் உறுதியான நடத்தைக்கு வழிவகுக்கிறது என்றும் அவர் கூறினார். பொங்கோல் ஈஸ்ட்டில் உணவை எடுப்பதற்காக குரங்குகள் ஒரு பேரங்காடிக்குள் நுழைவது தென்பட்டது.

