கொவிட்-19 தொற்று காலத்திற்குப் பிறகு முதல் பயணத்தை மேற்கொள்வோரின் விருப்ப நாடாக சிங்கப்பூர் உள்ளது என்று சுற்றுப்பயணிகளும் விருந்தோம்பல் துறை கவனிப்பாளர்களும் கூறி உள்ளனர்.
சுகாதாரப் பாதுகாப்புமிக்கது என்று கருதுவதால் ஏராளமான சுற்றுப்பயணிகள் தங்களது முதல் வருகையாக இங்கு வருவதோடு நீண்டகாலம் தங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுப்பயணிகள் சிங்கப்பூரில் தங்கி இருக்கும் நாள்களின் சராசரி எண்ணிக்கை இவ்வாண்டின் முதல் பாதியில் 7.1 நாள்களாக இருந்தன. இது 2019ஆம் ஆண்டில் 3.4 நாள்களாக இருந்ததாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் அண்மைய அறிக்கை கூறியது.
மேலும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை சிங்கப்பூருக்கு வந்த மொத்த சுற்றுப்பயணிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தோனீசியா, மலேசியா, இந்தியா, ஆஸ்திரேலியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்கள்.
ஏப்ரல் மாதம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது முதல் தாம் பல நண்பர்களையும் குடும்பத்தினரையும் ஏப்ரல், மே, ஜூலை மாதங்களில் சிட்னியிலிருந்து வரவழைத் ததாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளாரெட் கிரேம் என்னும் பெண்மணி கூறினார்.

