குரங்கம்மை: கடுமை தேவையில்லை
குரங்கம்மை தொற்றை உலக சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருப்பது பற்றி சிங்கப்பூர் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் நேற்று வரை ஆறு குரங்கம்மைச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இருந்தபோதிலும் இந்நோய்ப் பரவலைத் தடுக்க கடுமை யான சுகாதாரக் கட்டுப்பாடுகள் இப்போதைக்கு இங்கு தேவை இல்லை என்று நிபுணர்கள் கூறி உள்ளனர். கொவிட்-19 போல இந்தத் தொற்று சுவாசத் துளிகளால் பரவக்கூடியதல்ல என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆறு மாதங்களில் விற்பனையான 10ல் 1 கார் மின்சார வாகனம்
சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் விற்ற புது கார்களில் பத்தில் ஒன்று மின்சார வாகனமாக உள்ளது. அதிக சலுகைகள் கிடைப்பதால், இந்தப் போக்கு தொடர்கிறது. நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அண்மைய அறிக்கையின்படி, இந்த ஆண்டின் முதல் பாதி யில் 1,488 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப் பட்டு உள்ளன. இது மொத்தம் பதிவு செய்யப்பட்ட 16,567 புது கார்களில் 9 விழுக்காடு ஆகும்.
இது கடந்த ஆண்டு முடிவில் இருந்த 3.8 விழுக்காடு பங்கிலிருந்து அதிக உயர்வாகும். இந்த எண்ணிக்கையில் வாடகை கார்கள் அடங்காது. ஆனால், தூதரக நிகழ்ச்சி களுக்குப் பயன்படுத்தும் கார்கள் மற்றும் அவசர வாக னங்கள் போன்ற வரிவிலக்கு பெற்ற கார்கள் இதில் அடங்கும். கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒற்றை இலக்கமாக விற்பனை குறைந்ததிலிருந்து ஜூன் மாதம் மீண்டு 315 கார்களுடன், டெஸ்லா நிறுவனம் மின்சார வாகன விற்பனை யில் முன்னணியில் உள்ளது. அமெரிக்க நிறுவனமான டெஸ்லாவைத் தொடர்ந்து சீனத் தயாரிப்பான பிஒய்டி கார்கள் 300 என்ற எண்ணிக்கையில், தனியார் வாடகை வாகன நிறுவனங்களுக்காக முக்கிய மாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடை, வீடுகளுக்குள் குரங்குகள்
அண்மையில் பொங்கோல் மற்றும் கிளெமெண்டி வீடமைப்புப் பேட்டைகளில் அழையா விருந்தாளிகளாக ஒரு குரங்குக் கூட்டம், அக்கம்பக்கங்களில் சுற்றித் திரிந்ததோடு சில வீடுகளுக்குள்ளும் நுழைந்தன. தேசிய பூங்காக் கழக, வனவிலங்கு நிர்வாகப் பிரிவு அதிகாரியான மருத்துவர் ஏட்ரியன் லூ, இந்த நீண்டவால் குரங்குகள் குடியிருப்பு களை அண்டாமல் இருப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாகக் கூறினார். சிலர் உணவளிப்பது, உணவைத் தேடி வீட்டிற்கு நுழையலாம் என்று குரங்குகள் நம்புவதற்கு வழிவகுக்கிறது என்றும் அவர் கூறினார். உணவை எடுப்பதற்காக பொங்கோல் ஈஸ்ட்டில் உள்ள ஒரு பேரங்காடிக்குள் குரங்குகள் நுழைவது தென்பட்டது.

