அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிப்பதில் வசதிகுறைந்தோருக்கு உதவ நேற்று நடந்த சமூக நிகழ்ச்சிகள் வாயிலாக நிதி திரட்டப்பட்டது.
மேலும், மூத்தோருக்கு உதவும் கைப்பேசி செயலி ஒன்றும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடந்த 'ஈஸ்ட் கோஸ்ட் சமூக நாள்' நிகழ்ச்சியில் $500,000க்கும் மேல் நிதி திரட்டப்பட்டது.
200 குடியிருப்பாளர்களுக்கு மத்தியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான், தொடர்பு, தகவல் மற்றும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் மற்றும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிநாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெசிகா டான், செரில் சான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திரட்டப்பட்ட நிதியானது, எளிதில் பாதிப்புறும் குடும்பங்கள், மூத்தோர் மற்றும் குடியிருப்பாளர்
களை ஆதரிக்கக்கூடிய மின்னிலக்கக் கல்வித் திட்டத்திற்கும் புதுப்பிக்கப்பட்ட மடிக்கணினி போன்ற பொருள்களை வழங்கு
வதற்கான திட்ட நீட்டிப்புக்கும் பயன்படுத்தப்படும் என்று தெரி விக்கப்பட்டது.
இதைப் போலவே, நேற்றுக் காலை சர்க்யூட் ரோட்டில் ஒரு கூடைப்பந்தாட்டத் திடலி நடந்த 'மெக்பர்சன் கேர்ஸ் கார்னிவல்' நிகழ்ச்சியில் 'மெக்பர்சன் கேர்ஸ்' என்ற செயலியை, மெக்பர்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் அறிமுகப்படுத்தினார்.
இந்தச் செயலி சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழி
களிலும் கிடைக்கும்.
நட்புறவாடல் சேவைகள், கடிதங்கள் படித்தல், மொழிபெயர்த்தல், கனமான மளிகைப்பைகள் தூக்குதல், மருத்துவமனை செல்ல உதவுதல் போன்ற அன்றாட வேலைகளில் உதவி தேவைப்படும் குடியிருப்பாளர்கள் இந்தச் செயலி மூலம் உதவிநாட முடியும்.
இதுபோன்ற கோரிக்கைகள் தொண்டூழியர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்.
முதியோருக்கான செயலியை பயன்படுத்துவதற்கு ஏதுவாக, குரல் பதிவு வசதியும் அதில் அமைக்கப்பட்டுள்ளது.

