உலக சுகாதார நிறுவனக் குழுவில் சிங்கப்பூர் மருத்துவர்

1 mins read
20fd0f6f-66aa-4611-a34a-45708aa766bb
-

உயிரணு சிகிச்சையில் உலகள வில் முன்னணியிலுள்ள சிங்கப்பூர் மருத்துவர் ஒருவர், உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாகத் தனது துறையில் நிபுணத்துவம் பெற்று விளங்கும் மிக்கி கோ என்ற அந்த மருத்துவர், இரு நாடு களில் வேலை செய்கிறார். பிரிட்டனுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே பயணித்து வரும் இந்த 56 வயது மருத்துவர், ஆறு வாரங்கள் பிரிட்டனில் இருக்கும் போது ரத்தம் தொடர்பான ஆய்வுப்பணிகளை கவனித்த வாறே, செயின்ட் ஜார்ஜ் பல்கலைக்கழக மருத்துவ மனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை நோயாளி களைக் கவனித்துக்கொள்கிறார்.