16 வயதிலேயே உயரிய 'டயானா' விருது

16 வயதிலேயே உயரிய 'டயானா' விருது

2 mins read
12e6ac77-9048-4654-8ec4-cb77581798b0
-

ஹர்­ஷிதா பாலாஜி

ஓவி­யங்­கள் மூலம் பிறர் ஆனந்­த­மும் ஆறு­த­லும் பெற­வேண்­டும் என்ற உய­ரிய குறிக்­கோ­ளைக் கொண்­டுள்ள ஆன்யா, 'டயானா' விரு­தைப் பெற்­றுள்­ளார். மறைந்த பிரிட்­டிஷ் இள­வ­ரசி டயா­னா­வின் நினை­வா­கத் தொடங்­கப்­பட்­டது இவ்­வி­ருது. இள­வ­ரசி டயா­னா­வின் மகன்­கள் இள­வ­ர­சர்கள் வில்­லி­யம், ஹேரி ஆத­ரிக்­கும் அற­நி­று­வ­னத்­தின்­கீழ் இம்­மா­தம் ஒன்­றாம் தேதி­யன்று 16 வயது ஆன்யா ராவ்க்கு இவ்­வி­ருது வழங்­கப்­பட்­டது.

இளைய தலை­மு­றை­யி­ன­ரைச் சமூ­கத்­துக்­குத் தொண்­டாற்­றும்­படி ஊக்­கு­விக்­கும் 29 நாடு­க­ளைச் சேர்ந்த 180 இளை­யர்­க­ளுக்கு இவ்­வி­ருது வழங்­கப்­பட்­டது.

தந்­தை­யின் 'டயா­லி­சிஸ்' சிகிச்­சைக்­காக அடிக்­கடி மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­று­வந்த ஆன்யா, அங்­கி­ருந்த அறை­க­ளின் வெற்­றுச் சுவர்­களைக் கவ­னித்­தார். அவற்றை வண்­ண­ம­ய­மாக்­கு­ வ­தால் மருத்­து­வ­ம­னைக்கு வரு­வோரை மகிழ்­விக்க முடி­யும் என்று நினைத்­தார்.

அத­னால் கலை­கள், ஓவி­யம் வரை­தல் போன்­ற­வற்­றின் மூலம் பிற­ரது மன­ந­லனை மேம்­ப­டுத்­தும் நோக்­கில் 2020ஆம் ஆண்­டில் 'ஆர்ட்: கனெக்ட்' என்ற லாப­நோக்­க­மற்ற அமைப்பை ஆன்யா தொடங்­கி­னார். நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து உரு­வான இந்த அமைப்­பில் தற்­போது சுமார் 40 மாண­வத் தொண்­டூ­ழி­யர்­கள் உள்­ள­னர்.

மருத்­து­வத்­துறை, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை ஆகி­ய­வற்­று­டன் இணைந்து செயல்­ப­டு­வ­தில் கவ­னம் செலுத்­தி­வ­ரு­கிறது அமைப்பு.

இது­வரை பல தாதிமை இல்­லங்­களில் முதி­ய­வர்­க­ளுக்­காக ஓவி­யம் வரை­தல், வண்­ணம் தீட்­டு­தல் நிகழ்ச்­சி­க­ளுக்கு 'ஆர்ட்:கனெக்ட்' ஏற்­பாடு செய்­துள்­ளது.

அத்­து­டன், தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யில் உறுப்­பு தானம் தொடர்­பான விழிப்­பு­ணர்வை ஓர் ஓவி­யப் போட்­டி­யின் மூலம் உணர்த்­த­வும் அமைப்பு முற்­பட்­டது.

"அமைப்­பைத் தொடங்­கிய காலத்­தில் தாதிமை இல்­லத்­தில் இருந்த முதி­ய­வர்­களு­டன் உற­வா­டச் சிர­ம­மாக இருந்­தது. சக இளை­யர்­க­ளு­டன் பழ­கு­வது எளிது. ஆனால் தலை­முறை இடை­வெளி கார­ணத்­தால் முதி­ய­வர்­க­ளு­டன் பழக நாங்­கள் சற்று சிர­மப்­பட்­டோம்," என்­றார் ஆன்யா.

இருப்­பி­னும் சமூ­கத்­தில் மாற்­றங்­க­ளைக் கொண்டு வர­வேண்­டும் என்­ப­தற்­காக தொண்­டூ­ழி­யர்­க­ளைத் திரட்­டு­வ­தற்­குத் தொடக்­கப்­பள்­ளி­கள், அனைத்­து­ல­கப் பள்­ளி­கள் ஆகி­ய­வற்றை ஆன்யா தீவி­ர­மாக அணு­கி­னார்.

ஆன்­யா­வின் உயர்ந்த குறிக்­கோளை அங்­கீ­க­ரிக்­கும் வகை­யில் அவ­ரின் ஆசி­ரி­யர் அவரை 'டயானா' விரு­துக்­காக நிய­ம­னம் செய்­தார். வெவ்­வேறு நாடு­க­ளைச் சேர்ந்த 20 நீதி­ப­தி­கள் நிய­ம­னங்­களை ஆராய்ந்தபின் ஆன்­யா­வுக்கு 'டயானா' விருது வழங்­கப்­பட்­டது.

"ஆர்ட்:கனெக்ட் அமைப்பு தொடர்­பான பணி­களை மேற்­கொள்­வது எனக்கு ஒரு­வித நிம்­ம­தி­யைத் தரு­கிறது. நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து நிகழ்ச்­சி­க­ளுக்­குத் திட்­ட­மிடு­வ­தும் தொண்­டூ­ழி­யம் செய்­வ­தும் எங்­க­ளின் மன­வு­ளைச்­ச­லைக் குறைக்­க­வும் உத­வு­கிறது," என்­றார் ஆன்யா.

அமைப்பு மேலும் பல பணி­களை மேற்­கொள்ள வேண்­டும் என்­ப­தி­லும் மற்ற நாடு­களில் 'ஆர்ட்: கனெக்ட்' அறி­மு­கம் காண வேண்­டும் என்­ப­தி­லும் கவ­னம் செலுத்த விரும்­பு­வ­தா­கக் கூறு­கி­றார் இந்த இளம் சமூக ஆர்­வ­லர்.