சிங்கப்பூரில் மேலும் இரண்டு குரங்கம்மை தொற்று சம்பவங்கள்

சிங்கப்பூரில் மேலும் இரண்டு குரங்கம்மை தொற்று சம்பவங்கள்

1 mins read
c7abcf98-fa2c-42d0-9fef-268679c799ff
-

சிங்கப்பூரில் நேற்று(ஜூலை 24) 7ஆவது, 8ஆவது குரங்கம்மை தொற்று சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் எஸ்டோனியாவைச் சேர்ந்த 46 வயது ஆடவர். மற்றொருவர் 26 வயது சிங்கப்பூர் ஆடவர்.

இதனுடன் சிங்கப்பூரில் மொத்தம் 8 குரங்கம்மை தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் நான்கு உள்ளூரில் கண்டறியப்பட்ட தொற்றுச் சம்பவங்கள், நான்கு வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தவர்களிடம் கண்டுபிடிக்கப்பட்ட தொற்றுச் சம்பவங்கள். இந்த அனைத்து நோயாளிகளுக்கும் இடையே எந்த ஒரு தொடர்பும் கண்டுபிடிக்கப்படவில்லை.

சுகாதார அமைச்சு அதன் இணையத்தளத்தின் வெளியிட்ட தகவல்களின்படி அந்த எஸ்டோனிய ஆடவர் லண்டனிலிருந்து சிங்கப்பூருக்கு ஜூலை 21ஆம் தேதி வந்தார். அவருக்கு நேற்று (ஞாயிறு) குரங்கம்மை தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.