ஆறு மாதங்களுக்கும் நான்கு வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களுக்கான கொவிட்-19 தடுப்பூசி இவ்வாண்டு இறுதிக்குள் தயாராகிவிடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுவருவதாக அமைச்சு கூறியது. இந்த ஆண்டின் நான்காம் காலாண்டுக்குள் தடுப்பூசி தயாராகிவிடும் எனக் கூறப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களில் இரு சிறுவர்கள் கிருமித் தொற்று பாதிப்பால் மாண்டனர். அவர்கள் இருவரும் நான்கு வயதுக்குக் கீழ் உள்ளவர்கள்.
முதியவர்களைவிட இளம் பிள்ளைகளுக்கு நோய் தடுப்பு கூடுதலாக இருக்கும். ஆனால் சற்று வயதான சிறுவர்கள், பெரியவர்களை காட்டிலும் இளம் பிள்ளைகளுக்கு கிருமியை எதிர்கொள்ளும் ஆற்றல் வலுவாக இருக்காது.
சிங்கப்பூரில் இதுவரை பதிவான 1.7 மில்லியன் தொற்று சம்பவங்களில், கிட்டத்தட்ட 64,000 சம்பவங்கள் ஐந்து வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகளிடையே பதிவு செய்யப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டது. பெரும்பாலான பிள்ளைகள் வீட்டிலே இருந்து குணமடைந்தனர். 0.022 விழுக்காட்டு சம்பவங்களில் மட்டுமே பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு செயற்கை சுவாசம் தேவைப்பட்டது. வேறு சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

