கிராப், கோ ஜெக் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்கள் வாகன சவாரிச் சேவை கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளன. மற்ற டாக்சி நிறுவனங்கள் சென்ற வாரம் கட்டணத்தை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
கிராப் நிறுவனத்தின் கட்டண உயர்வு 80 காசு. கோ ஜெக் நிறுவனம் 10 கிலோமீட்டருக்கு குறைவான பயணங்களுக்கு கூடுதலாக 50 காசு வசூலிக்கும். 10 கிலோமீட்டருக்கு தொலைவான பயணங்களுக்கு கூடுதலாக 80 காசு செலுத்தவேண்டும். அண்மை காலமாக பெட்ரோல் விலை ஏற்றம் இறக்கம் கண்டுவருகிறது. கட்டணத்தை உயர்த்துவதன் மூலம், ஓட்டுநர்களுக்கு சீரான சம்பளம் கிடைப்பதை இது உறுதிப்படுத்தும் என நிறுவனங்கள் குறிப்பிட்டன. கம்ஃபர்ட்டெல்குரோ, டிரான்ஸ்கேப், ஸ்டிரைட்ஸ், பிரைம் ஆகிய டாக்சி நிறுவனங்கள் கட்டண உயர்வு இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை தொடரும் என்று தெரிவித்துள்ளன.

