மண்டாய் பூங்காக்கள் டாக்சி பயணத்திற்கு $3 கூடுதல் கட்டணம்

மண்டாய் பூங்காக்கள் டாக்சி பயணத்திற்கு $3 கூடுதல் கட்டணம்

1 mins read
d31615a6-0e36-4584-9ef8-0e5386c40834
-

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், ரிவர் வொண்டர்ஸ், நைட் சஃபாரி ஆகிய இடங்களின் டாக்சி மையங்களில் தொடங்கும் பயணங்களுக்கு மக்கள் கூடுதலாக $3 செலுத்துவர் என்று கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் நேற்று தெரிவித்தது. இந்தக் கூடுதல் கட்டணம் ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 31 வரை வாரத்தின் ஏழு நாள்களும் மாலை 4 மணிக்குத் தொடங்கி இரவு 11.59 வரைக்கும் வசூலிக்கப்படும் என்று ஃபேஸ்புக் பக்கத்தில் நிறுவனம் பதிவிட்டது. மண்டாய் பூங்காக்களில் டாக்சி சவாரி கிடைப்பது சிரமமாக உள்ளது என்று மக்களிடமிருந்து பல புகார்கள் வந்ததை அடுத்து நிறுவனம் இவ்வாறு அறிவித்துள்ளது. சாங்கி விமான நிலையத்தில் தொடங்கும் டாக்சி பயணங்களுக்கும் நிறுவனம் இதேபோன்ற கூடுதல் கட்டணத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது.