நீக்குப்போக்கான வேலை நடைமுறைக்கு அழைப்பு

சிங்­கப்­பூ­ரில் பத்­தில் எட்டு

முத­லா­ளி­கள் நீக்­குப்­போக்­கான வேலை நடை­மு­றையை அனு­ம­திக்­கின்­ற­னர்.

ஆனால் இதுகுறித்து பல­ருக்­குத் தெரி­ய­வில்லை என்று

மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் தெரி­வித்­தார்.

அந்த நிறு­வ­னங்­க­ளின் ஊழி­யர்­கள், வேலை தேடு­வோர் ஆகி­யோ­ருக்­கும்­கூட நீக்­குப்­போக்­கான வேலை தெரிவு குறித்து தெரி­யாது என்­றார் அவர்.

எனவே, நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பாடு தொடர்­பாக முத்­

த­ரப்பு பங்­கா­ளித்­து­வத் தர­நி­லையை நிற­வ­னங்­கள் கடைப்­பி­டிக்க வேண்­டும் என அர­சாங்­கம் விரும்­பு­வ­தாக டாக்­டர் டான் கூறி­னார்.

அப்­போ­து­தான் திற­னா­ளர்­களை இந்த நிறு­வ­னங்­க­ளால் ஈர்க்க முடி­யும் என்று அவர் தெரி­வித்­தார்.

நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பாட்­டுக்­குக் கோரிக்கை விடுக்­கும் முறை, கோரிக்கை ஆரா­யப்­படும் முறை, கோரிக்கை குறித்த

முடி­வு­களை ஊழி­யர்­க­ளி­டம் தெரி­வித்­தல் ஆகி­யவை முத்­த­ரப்­புப் பங்­கா­ளித்­து­வத் தர­நி­லை­யில்

அடங்­கும்.

டிபி­எஸ் ஃபியூச்­சர் ஃபார்வர்ட் வாரத்­தின் அறி­முக விழாவில் நேற்று கலந்­து­கொண்ட டாக்­டர் டான், இது குறித்து உரை­யாற்­றி­னார். எதிர்­கா­லத்­துக்­காக உள்­ளூர் ஊழி­யர்­களை டிபி­எஸ் வங்கி தயார்ப்­ப­டுத்­து­கிறது என்று டாக்­டர் டான் பாராட்­டி­னார்.

டிபி­எஸ் வங்கி தனது ஊழி­யர்­களை மீண்­டும் பயிற்­சி­க­ளுக்கு அனுப்­பு­வ­தை­யும் நிறு­வ­னத்­தின் வளர்ச்­சி­யில் தங்­க­ளுக்கும் முக்­கிய பங்கு உண்டு என்­பதை ஊழி­யர்­களை அது உண­ர­வைப்­ப­தை­யும் டாக்­டர் டான் சுட்­டி­னார்.

தமது உரை­யின்­போது கிளவுட் பொறி­யா­ள­ரான 32 வயது பிர­யன் சோங், சொத்து நிர்­வாக மேலா­ள­ரான 48 வயது திரு­வாட்டி

பர­மேஸ்­வரி ராஜேந்­தி­ரன் ஆகி­யோரை டாக்­டர் டான் பாராட்­டி­னார். கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யின்­போது திரு சோங் தமது வேலையை இழந்­த­தா­கக் கூறிய டாக்­டர் டான், அதை­ய­டுத்து அவர் டிபி­எஸ் வங்­கி­யில் இணைந்­த­

தா­கக் கூறி­னார். டிபி­எஸ் வங்­கி­யில் இணைந்­த­தும் அவர் இணை­யப் பாது­காப்பு உட்­பட தக­வல் தொழில்­நுட்­பத்­தின் பல்­வேறு அம்­சங்­கள் தொடர்­பான பயிற்­சி­களில் ஈடு­பட்­ட­தாக அமைச்­சர் டான் தெரி­வித்­தார்.

டிபி­எஸ் வங்­கி­யின் முன்­க­ளப் பணி­யா­ள­ரா­கத் தொடங்­கிய திரு­வாட்டி பரமேஸ்வரி பகு­தி­நேரப் பட்­ட­யக் கல்வியில் சேர்ந்து தமது திறன்களை மேம்படுத்தி படிப் படியாக உயர்ந்திருப்பதாக டாக்டர் டான் கூறினார். கிட்டத்தட்ட 260,000 பெண்களும் 120,000 ஓய்வுபெற்றவர்களும் ஊழியர் அணிக்கு வெளியே இருப்பதாகவும் தற்போது நிலவும் கடுமையான தொழிலாளர் சந்தையில் அவர்களை நிறுவனங்கள் ஈர்க்க வேண்டும் என்று அவர் ஊக்குவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!