பட்டும் திருந்தாமல் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டவருக்குச் சிறை

பட்டும் திருந்தாமல் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டவருக்குச் சிறை

3 mins read
5545e189-81ae-43c6-bb45-7a5c93ea560a
-

பிணை­யில் விடு­விக்­கப்­பட்­ட­

போ­தி­லும் மீண்­டும் குற்­றங்­க­ளைப் புரிந்த ஆட­வ­ருக்கு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

40 வயது இந்­தி­ரன் தேவ­தா­சுக்கு இரண்டு ஆண்­டு­கள், பத்து மாதங்­கள், ஆறு வாரச் சிறைத் தண்­ட­னை­யு­டன் ஆறு பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­பட்­டன.

ஆயு­தம் பயன்­ப­டுத்தி

வேண்­டு­மென்றே பிற­ருக்­குக் காயம் விளை­வித்­தது, காவல்­துறை அதி­கா­ரி­யைத் தாக்­கி­யது உட்­பட தம்மீது சுமத்­தப்­பட்ட ஐந்து குற்­றச்­சாட்­டு­களை இந்­தி­ரன்

ஒப்­புக்­கொண்­டார்.

பிற­ரைத் தாக்­கிய குற்­றத்­துக்­காக இந்­தி­ரன் இதற்கு முன்பு சிறைக்­குச் சென்­றுள்­ளார் என்று நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. பிணை­யில் விடு­விக்­கப்­பட்ட இந்­தி­ரன் 2020ஆம் ஆண்டு

ஏப்­ரல் மாதம் 3ஆம் தேதி­யன்று மீண்­டும் பழை­ய­படி வன்­மு­றை­யில் இறங்­கி­னார்.

அப்­போது அவ­ரு­டன் வசித்து வந்த 50 வயது பெண்ணை அவர் தாக்­கி­னார். அப்­பெண்­ணும்

இந்­தி­ர­னும் திரு­ம­ணம் செய்­து­கொள்ள இருந்­த­தாக நம்­பப்­ப­டு­கிறது. அதி­காலை 2.15 மணி அள­வில் குடி­போ­தை­யில் வீடு திரும்­பிய இந்­தி­ரன், அப்­பெண்­ணு­டன் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­டார். வாக்­கு­வா­தம் முற்றிப் போக,

வாச­னைத் திர­வப் போத்­தலை அப்­பெண் மீது இந்­தி­ரன் வீசி­னார். அந்த போத்­தல் அப்­பெண் மீது பட்­டது. இத­னால் அப்­பெண்­ணின் நெற்­றிப் பகுதி வீக்­கம் அடைந்­தது.

இதை­ய­டுத்து, அப்­பெண் வேறோர் ஆணு­டன் தொடர்பு வைத்­தி­ருப்­ப­தாக பர­விய வதந்­தி­ க­ளைக் கேட்டு அதே ஆண்டு நவம்­பர் மாதம் 20ஆம் தேதி­யன்று அவ­ரு­டன் மீண்­டும் வாக்­கு­

வா­தத்­தில் இந்­தி­ரன் ஈடு­பட்­டார்.

பிறகு சம்பந்தப்பட்ட ஆட­வ­ரி­டன் வீட்­டுக்­குச் சென்று அவ­ரது முகத்­தில் பல­முறை குத்­திக் காயம் விளை­வித்­தார். காய­ம­டைந்த ஆட­வர் கூ டெக் புவாட் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­றார். அவ­ரது மண்டை ஓட்­டில் முறிவு ஏற்­பட்­டது மருத்­து­வப் பரி­சோ­த­னை­யில் தெரி­ய­வந்­தது.

அத்­து­டன் அவ­ரது உட­லில் பல காயங்­களும் இருந்­தன.

இந்­தி­ரன் கைது செய்­யப்­பட்டு கடந்த ஆண்டு ஜன­வரி மாதம் 5ஆம் தேதி­யன்று பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார்.

கடந்த ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி­யன்று அப்­பெண்­ணுக்­கும் இந்­தி­ர­னுக்­கும் இடையே மீண்­டும் வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து, வீட்­டின் பூட்டை அப்­பெண் மாற்­றி­னார்.

இந்­நி­லை­யில், தாம் வேலை­யி­டத்­தில் இருந்­த­போது இந்­தி­ரன் தமது வீட்­டிற்­குள் அத்­து­மீறி நுழைந்­து­விட்­ட­தாக இரண்டு நாள்­கள் கழித்து அப்­பெண் காவல்­து­றை­யி­ன­ரி­டம் புகார் செய்­தார்.

அப்­பெண்­ணின் வீட்­டிற்குக் காவல்­துறை அதி­கா­ரி­கள் சென்­ற­போது, இந்­தி­ரன் அங்கு இருந்­தார். பூட்டை உடைத்து வீட்­டிற்­குள் சென்­றதை இந்­தி­ரன் அவர்­

க­ளி­டம் ஒப்­புக்­கொண்­டார்.

காவல்­துறை அதி­கா­ரி­கள் அவ­ரைக் கைது செய்­த­னர். காவல்­துறை வாக­னத்­தில் இருந்­த­போது அதி­காரி ஒரு­வ­ரின் இடது கரத்தை இந்­தி­ரன் உதைத்­தார்.

அதன் பிறகு என்ன நடந்­தது என்­பது குறித்து நீதி­மன்ற ஆவ­ணங்­கள் தெரி­விக்­க­வில்லை. ஆனால் இந்­தி­ரன் இருந்த அதே குண்­டர் கும்­ப­லில் முன்பு இருந்த ஆட­வர் ஒரு­வரை இந்­தி­ர­னுக்கு அப்­போது நிச்­ச­யிக்­கப்­பட்ட பெண் கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதம், ஈசூன் வட்­டா­ரத்­தில் உள்ள உண­வ­கத்­தில் கண்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அந்த 54 வயது ஆட­வர்

இந்­தி­ர­னின் உடல் ஆரோக்­கி­யம் குறித்து வதந்­தி­க­ளைப் பரப்­பி­ய­தாக அப்­பெண் தெரி­வித்­தார். எனவே அந்த ஆட­வர் அங்கு இருப்­பது குறித்து இந்­தி­ர­னுக்கு அவர் தக­வல் தெரி­வித்­தார். அரி­வா­ளு­டன் அங்கு வந்த இந்­தி­ரன், அந்த ஆட­வ­ரைத் தாக்கி அங்­கி ­ருந்து தப்பி ஓடி­னார்.

அந்த ஆட­வ­ருக்கு வலது கண்­ணி­லும் கண் இமை­யிலும் முகத்­தி­லும் காயங்­கள் ஏற்­பட்­டன. காயம் கார­ண­மாக அந்த ஆட­வ­ரால் அவ­ரது கண்ணை மூட முடி­ய­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.