சிங்கப்பூரில் மனநலச் சேவை
யின் தரத்தை மேம்படுத்துவது குறித்து மனநலம் தொடர்பான அமைப்புகளுக்கு இடையிலான பணிக்குழு 12 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. கல்வி, சுகாதார, மனிதவள அமைச்சுகளைச் சேர்ந்தவர்கள் பணிக்குழுவில் இடம்பெறுகின்றனர்.
இந்தப் பணிக்குழுவுக்கு சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தலைமைதாங்குகிறார். பணிக்குழுவுக்கு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஆலோசகராக இருக்கிறார்.
பல்வேறு வகையான தேவை
களைப் பூர்த்தி செய்யும் வகையில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் மனநலச் சேவை முறையும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் அடங்கும்.
நிபுணர்களின் உதவியை அளவுக்கு அதிகமாக சார்ந்திருப்பதை இது குறைக்கும் என்றும் மனநலச் சேவையையும் இது மேம்படுத்தும் என்றும் பரிந்துரைகள் தொடர்பாக நடத்தப்பட்ட கலந்துரையாடலில் பங்கெடுத்த முன்களப் பணியாளர்களும் சமூகப் பணியாளர்களும் தெரிவித்தனர்.
நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் டாக்டர் ஜனில் சமூக சேவை அமைப்புகளைச் சேர்ந்த 17 ஊழியர்கள், முன்களப் பணியாளர்களிடம் பரிந்துரைகள் பற்றி கலந்துரையாடினார்.
தற்போதைய மனநலச் சேவைகளை மேம்படுத்தலாம் என்று டாக்டர் ஜனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தகுந்த உதவிகள் மூலம் அவசரநிலை சிகிச்சை அறைகள், மனநலக் கழகம் ஆகியவற்றின் சுமையைக் குறைக்கலாம் என்றார் அவர்.
"மனநல பாதிப்பு மோசமடைவதற்கு முன்பு ஆலோசனை வழங்குதல், மீள்திறனுடன் இருக்க வழி
வகுத்தல் ஆகிய சேவைகளை முன்கூட்டியே வழங்கினால் நிலைமை முற்றிப்போன பிறகு உதவி நாடும் நிலையைத் தவிர்க்கலாம்," என்றார் டாக்டர் ஜனில்.

