சக ஊழியரை மானபங்கம் செய்தவருக்கு அபராதம்

சக ஊழியரை மானபங்கம் செய்தவருக்கு அபராதம்

1 mins read
1c098d14-68c6-47b3-b162-38792dd2133d
-

பல்கலைக்கழகம் ஒன்றில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த ஆடவர் தம்முடன் வேலை செய்த பெண்ணை வேலையிடத்தில் மானபங்கம் செய்தார்.

இந்த குற்றத்தைப் புரிந்த ஆடவருக்கு $6,000 அபராதம் விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைக் காக்க ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதியன்று இரவு 7 மணி அளவில் அந்த ஆடவரும் அப்பெண்ணும் தங்கள் அலுவலகத்தில் தனியாக இருந்ததாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்பெண் வேண்டாம் என்று சொன்னபோதிலும் அந்த ஆடவர் அவரை அணைத்து முத்தமிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.