பொஃப்மா எனப்படும் இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக உயர்
நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து
மேல்முறையீடு செய்ய சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி செய்த விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
பொய்ச் செய்திகளுக்கு எதிரான சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் சிறப்புப் பிரிவின்கீழ் இடம்பெறாது என்றும் மற்ற வழக்குகளைப் போலவே ஆராயப்பட்ட பிறகே மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்படும்
என்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.
சிங்கப்பூரின் மக்கள்தொகையை 2030ஆம் ஆண்டுக்குள் 10 மில்லியனாக உயர்த்த அரசாங்கம் இலக்கு கொண்டிருப்பதாக கடந்த பொதுத் தேர்தலுக்கான பிரசாரக்
காலகட்டத்தின்போது சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. அது பொய்ச் செய்தி என்றும் பொஃப்மா சட்டத்தின்கீழ் அதற்கான திருத்தத்தைப் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி பதிவிட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

