சிங்கப்பூரில் 9வது குரங்கம்மை சம்பவம்

சிங்கப்பூரில் 9வது குரங்கம்மை சம்பவம்

1 mins read
6b471466-7e58-44f0-8594-45c03bce3883
பாதிக்கப்பட்டவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

சிங்கப்பூரில் மேலும் ஒரு குரங்கம்மை தொற்று சம்பவம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து சிங்கப்பூரில் மொத்தம் ஒன்பது சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சிங்கப்பூரில் வசிக்கும் 31 வயது பிலிப்பீன்ஸை சேர்ந்த ஆடவரிடம் குரங்கம்மை நோய்த்தொற்று அறிகுறிகள் காணப்பட்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர் தற்போது சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆடவருக்கு முதன்முதலில் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 21) காய்ச்சல் ஏற்பட்டது. அவரது முகத்திலும் ஆசனவாய்ப் பகுதியிலும் அரிப்பு தென்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்குச் சென்றார்.

தற்போது தொடர்புகளின் தடங்களைக் கண்டறியும் முயற்சி நடந்துவருவதாக அமைச்சு கூறியது.

பதிவுசெய்யப்பட்ட ஒன்பது சம்பவங்களில், நான்கு பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். ஐவருக்கு தொற்று உள்ளூரில் ஏற்பட்டது. 75க்கு அதிகமான நாடுகளில் 16,000 குரங்கம்மை சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.