$1,000க்கு சாப்பிட்டு பணம் கொடுக்காமல் சென்ற கும்பல்; 5 நாள்கள் கழித்து திரும்பியது

$1,000க்கு சாப்பிட்டு பணம் கொடுக்காமல் சென்ற கும்பல்; 5 நாள்கள் கழித்து திரும்பியது

2 mins read
2ee47764-087a-449e-82fd-98a9c5ec9fbd
படம்: ரசா இஸ்டிமெவா' உணவகம் -

சிங்கப்பூரில் உணவகம் ஒன்றில் விருந்து சாப்பிட்டுவிட்டு அதற்கு பணம் கொடுக்காமல் கிளம்பியது ஒரு கும்பல். 16 பேர் சாப்பிட்டதற்கு மொத்த கட்டணம் $1,188.

இவர்கள் பணம் கொடுக்க கடைக்கு வருவார்கள் என உணவகம் நம்பிக்கையில் காத்திருக்கிறது. இதனால், காவல் துறையிடம் தற்போது புகார் அளிக்கப்போவதில்லை என உணவகம் கூறியுள்ளது.

எனினும் ‌ஷின் மின் சீன நாளிதழில் இச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து அந்த கும்பல் மீண்டும் உணவகத்திற்குத் திரும்பி பணத்தைக் கட்டியுள்ளது.

உட்லண்சில் உள்ள 'ராசா இஸ்டிமெவா' உணவகத்தில் சென்ற வியாழக்கிழமை (ஜூலை 21) இந்த சம்பவம் நடந்தது. இதுவரை பணம் கொடுக்க யாரும் உணவகத்துக்கு வரவில்லை.

16 பேர் கொண்ட குழு, சுமார் 7 மணியளவில் இரவு உணவு சாப்பிட உணவகத்துக்கு வந்துள்ளது. சாத்தே, கரும்புச்சாறு, இளநீர் போன்ற பலதரப்பட்ட உணவு, பான வகைகளை அவர்கள் தேர்வுசெய்துள்ளனர். அவர்கள் கடைசியாக இனிப்புவகையை சாப்பிட்டுவிட்டுக் கிளம்பியபோது, அவர்கள் பணம் கொடுத்துவிட்டதாக உணவக ஊழியர்கள் எண்ணினர். 9 மணிக்கு கடையை மூடும்போதுதான், அந்த குறிப்பிட்ட மேசை கட்டணம் செலுத்தவில்லை என்று தெரியவந்தது.

அவர்கள் பணம் கொடுக்க கடைக்கு வரவில்லை என்றால், அதிகாரிகளிடம் புகார் செய்வதைத் தவிர வேறுவழி இல்லை என்றது உணவகம்.

இந்நிலையில் நேற்று அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் உணவகத்திற்குத் திரும்பி கட்டணத்தை முழுமையாக் கட்டியது.

பல பேர் அப்போது இருந்ததால் யாரோ ஒருவர் கட்டணத்தைக் கட்டியிருப்பார் என்று ஒவ்வொருவரும் எண்ணியுள்ளனர்.