வருவாய் ஈட்டினாலும் இன்னும் அதிக சவால்கள்

வருவாய் ஈட்டினாலும் இன்னும் அதிக சவால்கள்

2 mins read
6107b444-41fe-42a6-948c-7efcfb47258d
-

உயர்ந்­து­வ­ரும் விலை­வாசி, ஏற்ற இறக்­க­மான சந்­தை­கள் ஆகி­ய­வற்­றுக்கு இடை­யி­லும் சிங்­கப்­பூர் முத­லீட்டு நிறு­வ­ன­மான ஜிஐசி இவ்­வாண்டு நிலை­யான வரு­வா­யைப் பதி­வு­செய்து உள்­ளது.

இருப்­பி­னும், முத­லீட்­டா­ளர்­க­ளுக்­கான சூழல் இன்­னும் சவால்­மிக்­க­தா­கவே உள்­ளது என்­றும் விரி­வான சந்தை வரு­வாய் குறை­யும் சாத்­தி­யம் உள்­ள­து என்றும் ஜிஐசி கூறி­யுள்­ளது. சிங்­கப்­பூ­ரின் நிதிக் கையி­ருப்பை நிர்­வ­கிக்­கும் மூன்று தனித்­துவ நிறு­வ­னங்­க­ளுள் ஜிஐ­சி­யும் ஒன்று.

இவ்­வாண்டு மார்ச் 31ஆம் தேதி­யு­டன் முடி­வ­டைந்த காலத்­தில் 20 ஆண்­டுக்­கான வரு­டாந்­திர லாபம் 4.2 விழுக்­காடு என ஜிஐசி பதி­வு­ செய்து உள்­ளது.

அதா­வது, 2003ஆம் ஆண்டு $100 முத­லீடு செய்­தி­ருந்­தால் தற்­போது அந்­தத் தொகை $228ஆக லாபத்­து­டன் சேர்ந்து அதி­க­ரித்­தி­ருக்­கும். இந்த லாபத்­தைக் கணக்­கி­டும்­போது பண­வீக்க நில­வ­ர­மும் கவ­னத்­தில் கொள்­ளப்­படும்.

இதற்­கி­டையே, தற்­போ­தைய முத­லீட்டு நில­வ­ரம் தீவிர நிச்­ச­ய­மற்ற தன்­மையை எதிர்­நோக்கி இருப்­ப­தாக ஜிஐசி நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி லிம் சோவ் கியாட் தெரி­வித்து உள்­ளார்.

"பொரு­ளி­யல் விரைந்து மீட்­சி­அடைய வேண்­டிய கட்­டா­யத்­தில் சம்­ப­ளத்தை உயர்த்த வேண்­டிய நிலை­யில், பொரு­ளி­யல் நில­வ­ரம் பண­வீக்­கத்­தின் பிடி­யில் சிக்கி உள்­ளது. விநி­யோ­கத் தொடர் இடை­யூ­று­களும் குறுக்கே நிற்­கின்­றன. இவற்­று­டன், புவிசார் ­அ­ர­சி­யல் பதற்­றம் தொடர்ந்து அதி­க­ரிப்­ப­தால் உல­கம் கடு­மை­யான இடர்ப்­பா­டு­களை எதிர்­நோக்­கு­கிறது. இப்ப­டிப்­பட்ட நிலை­யில் பர­வ­லான சந்தை வரு­வாய் குறை­யக்­கூ­டும். வரு­வாய் ஈட்­டக்­கூ­டிய வாய்ப்­பு­கள் பெரிய அள­வில் இல்லை," என்­றார் திரு லிம்.

ஜிஐ­சி­யின் வரு­வாய் நிலைத்­தன்மை சிங்­கப்­பூ­ரின் வர­வு­செ­ல­வுத் திட்ட செல­வி­னத்­திற்கு உத­வக்­கூ­டும்.

ஜிஐ­சி­யில் திரட்­டப்­படும் நீண்­ட­கால முத­லீட்டு முத­லீட்டு வரு­வா­யில் 50 விழுக்­காடு வரை அர­சாங்­கம் செலவு செய்­ய­லாம் என தெமா­செக் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­ன­மும் சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் தெரி­வித்து இருந்­தன.

இந்த நிதி ஆண்­டுக்­கான எம்­ஐ­ஆர்சி எனப்­படும் நிகர முத­லீட்டு வரு­வாய் பங்­க­ளிப்பு $21.6 பில்­லி­யன் என மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. ஆனால், சிங்­கப்­பூர் நாண­யம் வலு­

வ­டைந்­த­தன் கார­ண­மாக வெளி­நாட்டு நாண­யக் கையி­ருப்பு மதிப்­பில் $7.4 பில்­லி­யன் நிகர இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தால் இம்­முறை எம்­ஐ­ஆர்­சிக்­கு பங்­க­ளிக்­கப்­போவதில்லை என சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் கடந்த வாரம் கூறி­யி­ருந்­தது.