ஆஸ்திரேலியாவின் நியூகாசல் நகரின் தூதர்களாக ஆறு சிங்கப்பூரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டீவன்ஸ் சாலை அருகில் உள்ள சிங்கப்பூருக்கான ஆஸ்திரேலியத் தூதரின் இல்லத்தில் இந்த கொழும்புத் திட்ட கல்விமான்கள் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் நியூகாசல் நகரத்தின் மேயர் நுவாட்டாலி நெல்ம்ஸ்
கலந்துகொண்டார்.
நியூகாசல் நகரத்தை உலக நாடுகளின் பார்வைக்குக் கொண்டு சென்றதற்காக அவர்களுக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
கௌரவிக்கப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சரும் எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டின் தலைவருமான கோ பூன் வானும் ஒருவர்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி சியோங் கூன் ஹியன், யுஓபி வங்கி யின் முன்னாள் நிர்வாக இயக்குநர் பில் சுவா, மனிதவள மற்றும் தகவல், தொடர்பு, கலைகள் அமைச்சுகளின் முன்னாள் நிரந்தரச் செயலாளர் டான் சின் நாம், சிங்கப்பூர் உணவுத் துறையின் முன்னாள் தலைமை நிர்வாகி பீட்டர் டே பிவான் ஹுவாட், உகாண்டாவுக்கான சிங்கப்பூரின் தற்போதைய தூதர் திரு ஜஸ்பால் சிங் ஆகிய ஐவருக்கு இந்தக் கௌரவம் கிடைத்துள்ளது.
இந்த ஆறு பேரும் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள நியூகாசல் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள்.
"இந்த கொழும்புத் திட்ட கல்வி மான்களுக்கு அரசியல், வர்த்தகம், வீடமைப்பு, மேம்பாடு, போக்கு
வரத்து ஆகியவற்றில் நிறைய அனுபவம் உள்ளது. அவற்றில் இவர்கள் தடம் பதித்தவர்கள்.
"நியூசாலில் இருந்த காலகட்டத்தை இவர்கள் மிகுந்த மகிழ்ச்சி யுடன் நினைவுகூர்கின்றனர். தங்கள் வெற்றிக்கு நியூகாசலில் இருந்தபோது கிடைத்த அனுபவங்களும் காரணம் என்று கூறுகின்றனர். இதைப் பாராட்டி இந்த ஆறு பேரையும் நியூகாசல் நகரம் கௌரவிக்கிறது. நியூகாசலை உலக மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்ல இவர்கள் மேற்கொள்ளும் முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம்," என்று திருவாட்டி நெல்ம்ஸ் கூறினார். 2015ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை போக்குவரத்து அமைச்சராகப் பதவி வகித்த திரு கோ, நியூகாசல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டக் கல்வி பயின்றவர். 1973ஆம் ஆண்டில் அவருக்கு கொழும்புத் திட்ட உபகாரச்
சம்பளம் வழங்கப்பட்டதை அடுத்து அவர் நியூகாசல் பல்கலைக்கழகத்தில் இணைந்தார். பட்டக் கல்வியின் இறுதி ஆண்டில் அவர் ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்துகொண்டார். முன்னாள் பிரிட்டிஷ் காலனித்துவ நாடுகளைச் சேர்ந்த ஆகச் சிறந்த மாணவர்கள், காமன்வெல்த் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டக் கல்வி பயில 1951ஆம் ஆண்டில் கொழும்புத் திட்டத்தின்கீழ் உபகாரச்சம்பளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

