உன்னதமாகச் சேவையாற்றிய ஆறு தாதிகளுக்கு நேற்று அதிபர் விருது வழங்கப்பட்டது.
மனநலக் கழகத்தைச் சேர்ந்த தாதிமை மருந்தகரான 60 வயது திரு அசிஸ் எபி ஹமீது, கேகே மகளிர், சிறார் மருத்துவமனையின் தாதிமைப் பிரிவின் துணைத் தலைவரான 47 வயது திருவாட்டி ஜூலியா எங் சியூ லீ, அசிசி அந்திமகால நிலையத்தைச் சேர்ந்த மூத்த தாதிமைக் கல்வியாளரான 42 வயது திருவாட்டி லியூ ஃபாங், டான் டோக் செங் மருத்துவமனையின் தாதிமைப் பிரிவின் துணைத் தலைவரான 56 வயது திருவாட்டி நிர்மலா கர்மரூன், சாங்கி பொது மருத்துவமனையைச் சேர்ந்த தலைமைத் தாதியரான 50 வயது திருவாட்டி பிங் கெக் கெங், செங்காங் பொது மருத்துவமனையின் தாதிமைப் பிரிவின் உதவி இயக்கு
நரான 46 வயது திருவாட்டி சாங் டி ஆகியோர் விருதுகளைப் பெற்றனர். விருது வென்றவர்களில் ஒரு
வரான திரு அசிஸ் எபி ஹமீது, மனநலக் கழக நோயாளிகள் மருத்துவமனைக்கு வெளியே யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் வாழ உருவாக்கப்பட்ட மறுவாழ்வுத் திட்டத்துக்கு தலைமைதாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுவாழ்வுத் திட்டத்தில் ஈடுபட்டு இதுவரை 120 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

