சிங்கப்பூரின் முதல் செயற்கை கடற்படுகை திறப்பு

சிங்கப்பூரின் முதல் செயற்கை கடற்படுகை திறப்பு

1 mins read
1255a0cf-13c6-487f-9dda-9fa4e1c0d539
-

கடல்­துறை, கட­லோ­ரப் பொறி­யி­யல், கடல் போக்­கு­வ­ரத்து, கன­மழை, கட­லோ­ரப் பாது­காப்பு ஆகி­யவை தொடர்­பாக கூடு­தல் ஆய்வு நடத்த உத­வும் வகை­யில் சிங்­கப்­பூ­ரின் முதல் செயற்கை கடற்படுகை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

$107 மில்­லி­யன் செல­வில் அமைக்­கப்­பட்ட இந்­தச் செயற்கை கடற்படுகை நேற்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் உள்ள டிகோம்ஸ் கட்­ட­டத்­தில் அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறக்­கப்­பட்­டது.

இந்த ராட்­சத நீச்­சல் குளத்­தைக் கட்டி முடிக்க எழு ஆண்­டு­கள் ஆகின.

60 மீட்­டர் நீளம், 48 மீட்­டர் அக­லம் கொண்ட இந்த கடற் படுகை 12 மீட்­டர் ஆழம் கொண்­டது. இதன் பரப்­ப­ளவு 40 இருக்­கை­கள் கொண்ட ஐந்து பேருந்து ­க­ளுக்­குச் சமம்.