கட்டட மேலாண்மைத் துறை உருமாற தொழில்நுட்பம் முக்கியம்

கட்டட மேலாண்மைத் துறை உருமாற தொழில்நுட்பம் முக்கியம்

2 mins read
6a058f38-d0a7-4ce6-8fa5-0e4ccf4b3e95
மாறிவரும் கட்டட மேலாண்மைத் துறையைப் பற்றித் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் பேசினார். படம்: சாவ்பாவ் -

'ஃபெசி­லிட்­டிஸ் மேனேஜ்­மென்ட்' எனும் ஒரு கட்­ட­டத்­தின் பல்­வேறு அம்­சங்­க­ளை­யும் வச­தி­க­ளை­யும் கவ­னித்­துக்­கொள்­ளும் கட்டட மேலாண்மை நிறு­வ­னங்­க­ளின் பொறுப்பு மாறி­ வ­ரு­வ­தாக துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் குறிப்­பிட்­டுள்­ளார். கட்­ட­டங்­க­ளின் பகுதி­க­ளைச் சரி­வ­ரக் கவ­னிப்­ப­து­ மட்டு­மின்றி அவற்றைக் கட்­ட­டத்­தில் உள்­ள­வர்­க­ளின் நலனை மேம்­ப­டுத்­தும் வண்­ணம் அமைக்­கும் பொறுப்பும் தற்­போது கட்­டட மேலாண்மைத் துறை நிறு­வ­னங்­களுக்கு இருப்­ப­தாக அவர் சுட்டினார்.

"அடிப்­படை அம்­சங்­க­ளை­யும் கட்­ட­மைப்­பை­யும் தாண்டி ஒரு கட்­ட­டம் அதில் இருப்­ப­வர்­க­ளின் தேவை­க­ளைப் பூர்த்­தி­செய்­யும் வகை­யில் வடி­வ­மைக்­கப்­பட்டு நிர்­வகிக்­கப்­ப­ட­வேண்­டும்," என்று 'வோர்ல்ட் வொர்க்­பி­ளேஸ் ஏஷிய-பசி­பிக்' எனும் தொழில்­துறை நிகழ்ச்சி­யின் தொடக்க உரையை ஆற்­றி­ய­போது திரு ஹெங் சொன்­னார். கட்­டட மேலாண்மைத் துறைக்­குத் தொழில்­நுட்­பம் பல­ன­ளிக்­கக்­கூ­டும் என்­றா­லும் திட்­ட­மிடா­மல் அதைப் பயன்­ப­டுத்­த­ வேண்­டாம் என்று அவர் எச்­ச­ரித்­தார்.

"பாது­காப்பு, துப்­பு­ர­வுப் பணி­களுக்கு ஒரு­வர் இயந்­திர மனி­தர்­க­ளைப் பயன்­ப­டுத்­த­லாம். ஆனால், வெவ்­வேறு தளங்­க­ளுக்­குச் செல்­வ­தற்கு அத்­த­கைய இயந்­திர மனி­தர்­கள் எவ்­வாறு மின்­தூக்கி­களை உபயோகிக்கும், தங்­க­ளுக்­கி­டையே எவ்­வாறு தொடர்­பு­கொள்­ளும்," என்று திரு ஹெங் உதா­ர­ணம் காண்­பித்­தார்.

எனி­னும், கட்­டட மேலாண்மைத் துறை தழைக்­க­வும் திற­மை­யான ஊழி­யர்­களை ஈர்க்­க­வும் கட்­ட­டத்­தின் அனைத்து அம்­சங்­க­ளை­யும் ஒருங்­கி­ணைக்­கும் முறை பின்­பற்றப்­ப­ட­வேண்­டும் என்­ப­தை­யும் அவர் கு­றிப்­பிட்­டார்.

"கட்­டட மேலாண்மைத் துறை வேலை­கள், மன­த்த­ள­வி­லும் உடல் ரீதி­யா­க­வும் சிர­மத்­தைத் தரும் 24 மணி­நே­ரத்­திற்­கும் தயார்­நி­லை­யில் இருக்­க­வேண்­டி­யவை என்ற கருத்து பல­ரி­டையே உள்­ளது. அத­னால் இத்­து­றைக்கு ஊழி­யர்­களை ஈர்ப்­பது சவா­லாக இருக்­கிறது," என்று 'சிஃப்மா' எனும் சிங்­கப்­பூர் அனைத்­து­ல­கக் கட்­ட­ட மேலாண்மை சங்­கத்­தின் உத்தி, புத்­தாக்­கப் பிரி­வின் தலை­வ­ரான திரு ஜி. சேகர் கூறினார்.

உல­கின் எந்­தப் பகு­தி­யி­லி­ருந்­தும் கட்­ட­டங்­க­ளின் நிலையை அறிய உணர்கரு­வி­க­ளை­யும் கேம­ராக்­க­ளை­யும் கட்­டட மேலாண்மைத் துறை நிறு­வ­னங்­கள் பயன்­படுத்­த­லாம். அதிக உய­ரத்­தி­லி­ருந்து கட்­ட­டத்­தின் முன்­ப­கு­தி­யைக் கண்­கா­ணிக்க ஆளில்லா வானூர்­தி­களைப் பயன்படுத்தலாம்.

இது­போன்ற நவீன தொழில்­நுட்ப முறை­க­ளின் மூலம் கட்­டட மேலாண்மைத் துறை வேலை­கள் குறித்த கருத்­து­கள் மாற­லாம் என்று அவர் சொன்­னார்.

இத்­த­கைய வழி­க­ளின் வாயி­லாக குறைந்த எண்­ணிக்­கை­யில் ஊழி­யர்­கள் வேலை­யில் அமர்த்­தப்­ப­டும்­போது அது கட்­டட செயல்­பாட்­டுத் துறை எதிர்­நோக்­கும் மனி­த­வ­ளப் பற்­றாக்­கு­றைக்­கும் தீர்வாக அமையலாம் என்­பதைத் திரு சேகர் குறிப்­பிட்­டார்.

கொள்­ளை­நோய்ப் பர­வ­லுக்­குப் பிந்­திய காலத்­தில் கட்­டட மேலாண்மைத் துறை தழைக்க அது இயந்திரவியல், பொருள்க­ளின் இணை­யம், அதிக திறன்­கள் இருப்­போ­ரைக் கொண்­டி­ருப்­பது ஆகிய மூன்று அம்­சங்­க­ளை­யும் பின்­பற்­ற­வேண்­டும் என்­றும் அவர் சொன்னார்.