விலை மாதருக்குப் பணம் தராமல் ஏமாற்றிய ஆடவர்

விலை மாதருக்குப் பணம் தராமல் ஏமாற்றிய ஆடவர்

1 mins read
ff5be5e8-1021-46f5-bceb-017255f88ffb
-

சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்ட பிற­கும் ஓர் ஆட­வர் பல பெண்­களை ஏமாற்றி 72,000 வெள்­ளிக்­கும் அதி­க­மான தொகை­யைப் பறித்­துள்­ளார்.

ஏற்­கெ­னவே பல பெண்­களை ஏமாற்­றி­ய­தற்­காக 49 வயது டான் சிப் ஹுவாட்­டுக்கு 2013ஆம் ஆண்டு ஏழு ஆண்­டு­கள் சீர்­திருத்­தப் பயிற்சி மேற்­கொள்­ளு­மாறு தண்­டனை விதிக்­கப்­பட்­டது. தண்­ட­னையை நிறை­வ­டைந்த பிறகு 2020ஆம் ஆண்டு சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்ட பின்­னர் அவர் மேலும் 10 பெண்­களை ஏமாற்­றி­யிருக்­கி­றார்.

டான் அந்­தப் பெண்­களை சென்ற ஆண்டு ஜன­வரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஏமாற்­றி­னார். அவர்­களில் குறைந்­தது நான்கு விலை மாதரும் அடங்­கு­வர்.

விளம்­பர இணை­யத்­த­ள­மான லொக்­கான்­டோ­வில் தனக்கு இளம் பெண் தேவை என்று விளம்­ப­ரம் தந்­தி­ருந்­தார்.

தான் நிதித் துறை­யில் பணியாற்றுவதாகவும் தனது மாதச் சம்பளம் 60,000 வெள்ளிக்கும் மேல் என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

உண்­மை­யி­லேயே டானின் மாதச் சம்­ப­ளம் 2,000 வெள்­ளிக்­கும் குறைவு. முன்­ன­தாக துப்­பு­ர­வுப் பணி­யா­ள­ராக இருந்த அவ­ருக்குச் சென்ற ஆண்டு ஜன­வரி, பிப்­ர­வரி மாதங்­களில் வேலை ஏதும் இல்லை.

பெண்­களை ஏமாற்­றி­ய­தன் தொடர்­பில் தன் மீது சுமப்­பத்­தப்­பட்ட ஏழு குற்­றச்­சாட்­டு­களை டான் ஒப்­புக்­கொண்­டார். அடுத்த மாதம் தீர்ப்­ப­ளிக்­கும்­போது மேலும் 13 குற்றச்­சாட்­டு­கள் கருத்­தில்­கொள்ளப்படும்.