செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a4a2f6f0-2f8a-4ca4-a0bc-938b59a2bb45
-

பொய் சாட்சியளிக்க லஞ்சம் தந்தவருக்குச் சிறை

மூவ­ரைக் கத்­தி­யால் குத்­திய ஓர் ஆட­வர் தப்­பிப்­ப­தற்­காக ஒரு­வருக்கு 10,000 வெள்ளியை லஞ்சமாகக் கொடுத்திருக்கிறார்.

குற்­ற­வா­ளி­யான முர­ளேந்­தி­ரன் தோண்டி (படம்), பெயர் தெரிவிக்கப்­ப­டாத ஓர் ஆடவர், சகோதரர்களான சந்­தி­ரன் மாயழகு, சுரேஷ் மாய­ழகு ஆகிய மூவரை 2012ஆம் ஆண்­டில் குத்­தி­யி­ருந்­தார். 2015ஆம் ஆண்டு 53 வயது முரளேந்திரன் சந்­தி­ர­னுக்கு லஞ்­சம் கொடுத்தார்.

இக்குற்றத்திற்காக முர­ளேந்­தி­ர­னுக்கு ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்­கப்­பட்­டது.

பாதுகாப்பு அதிகாரிக்கு லஞ்சம் தர முயன்றவருக்குச் சிறை

'செர்ட்டிஸ்' பாதுகாவல் அதிகாரிக்கு 100 வெள்ளியை லஞ்சமாக வழங்க முயன்ற ஓர் ஆடவருக்கு நான்கு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பங்ளாதேஷைச் சேர்ந்த 41 வயது கான் முகம்மது அலமின் அந்தக் குற்றத்தைப் புரிந்தார். அச்சம்பவம் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதியன்று நிகழ்ந்தது.

சிகரெட்டை கால்வாய்க்குள் எறிந்ததற்காகத் தான் 300 வெள்ளி அபராதம் செலுத்தவேண்டும் என்பதை அறிந்த கான் பாதுகாவல் அதிகாரிக்கு லஞ்சம் தர முயன்றார்.

கில்பெர்ட் கோ உரிமமின்றி பொதுக் கூட்டம் நடத்தியது நிரூபணம்

கில்பெர்ட் கோ (படம்) என்றழைக்கப்படும் உள்ளூர் கிளர்ச்சியாளர் கோ கியாவ் வா தகுந்த உரிமமின்றி பொதுக் கூட்டத்தை நடத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளது. தனது கோரிக்கையை விளம்பரப்படுத்த இவர் காலாங் சாலையில் இருக்கும் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையக் கட்டடத்திற்கு வெளியே பொதுக் கூட்டத்தை நடத்தினார்.

இந்தியாவிலிருந்து வரும் அனைத்து விமானச் சேவைகளையும் தடைசெய்யுமாறு சொல்லும் குறிப்புப் பலகைகளை வைத்து இவர் சென்ற ஆண்டு மே ஒன்றாம் தேதியன்று பொதுக் கூட்டம் நடத்தினார். தான் ஓர் இனவாதி இல்லை என்றும் இவர் வைத்திருந்த குறிப்புப் பலகைகளில் எழுதப்பட்டிருந்தது.