இந்திய ஆடவரைவிட்டுப் பிரிய மனம் இல்லாத மைனா (காணொளி)

இந்திய ஆடவரைவிட்டுப் பிரிய மனம் இல்லாத மைனா (காணொளி)

1 mins read
043c03b0-e1bb-441f-9afb-81731603f9f9
-

ஓர் இந்திய ஆடவருடன் நட்பு கொண்ட மைனா பறவை ஒன்றின் காணொளி இணையத்தில் பிரபலமாகி வருகிறது.

சிங்கப்பூரில் ஓர் இந்திய ஆடவர் மீது அமர்ந்த ஒரு மைனா பறவை அவரைவிட்டுப் பறந்து செல்ல மறுத்தது.

இச்சம்பவம் காணொளியில் பதிவானது.

பதிவாகாமல் இருந்திருந்தால் யாரும் ஆடவர் கூறியதை நம்பியிருக்கமாட்டார்கள்.

ஆடவரின் வலது தோளில் மைனா உட்கார்ந்திருந்த காட்சி ஒரு நிமிடக் காணொளியில் இடம்பெற்றுள்ளது.

"நீ செல்வாயா மாட்டாயா?" என்று அவர் மைனாவைப் பார்த்துக் கேட்டதும் பதிவானது.

மைனாவுடன் அவர் ஏற்கெனவே சில நேரம் பேசிக்கொண்டிருந்தது போல் தெரிந்தது.

ஆடவர் தொடர்ந்து பேசினார், ஆனால் மைனாவுக்கு அவரை விட்டுப் பிரியும் எண்ணம் இல்லை.

ஆடவர் என்ன பேசினாலும் அவர் தனது உடலை எவ்வளவு அசைத்தாலும் மைனா பொருட்படுத்தவில்லை.

மைனா எத்தனை நேரம் அவருடன் இருந்தது என்பது தெரியவில்லை.

ஒரு வேளையாகப் பறந்து சென்றதா என்ற தகவலும் இல்லை.

மெக்ஃபர்சன் வட்டாரத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் டிக்டாக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதில் பலர் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர்.

சிங்கப்பூரில் ஏற்கெனவே இதுபோல் மைனாக்கள் மனிதர்களுடன் 'தொடர்புகொண்ட' சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.