மீட்டுக்கொள்ளப்பட்ட 'குவே' உணவு வகைகள்

மீட்டுக்கொள்ளப்பட்ட 'குவே' உணவு வகைகள்

1 mins read
37830326-e242-430b-a831-279c232e44c7
மீட்டுக்கொள்ளப்படும் உணவு வகைகளில் ஒன்றான 'பெஸ்ட் ஒன்' கேக். படம்: சிங்கப்பூர் உணவு அமைப்பு -

ஒன்பது உள்ளூர் உணவு உற்பத்தியாளர்கள் தயார் செய்த பிரபல 'குவே' உணவு வகைகள் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

வாழைப்பழத்தின் சுவையைக் கொண்ட 'பெஸ்ட் ஒன்' கேக், 'பேக் கிங்' கலந்த பழங்கள் பொட்டலங்கள் ஆகியவையும் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

சம்பநத்ப்பட்ட உணவு வகைகளில் தெரிவிக்கப்படாத உணவுப் பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளதும் அவற்றில் உணவுப் பொருள்கள் சரிவரப் பயன்படுத்தப்படாததும் காரணங்கள்.

'டோ சுவான் கீ ஃபூட்ஸ்டஃப்', 'டொங்லி ஃபூட் மேனியூஃபேக்சரிங்', 'ஏஎம்கே நோன்யா குவே', 'சிட் குவான் ஃபூட்ஸ்டஃப்', 'டிலைட் பேக்கர்', 'தாம்சன் ஃபூட்ஸ்டஃப் மேனியூஃபேக்சரிங்', 'சின் ஹுவா கொக்கொனட்ஸ் இண்டஸ்ட்ரியல்', 'டியோங் பாரு தியென் போ ஷுய் குவே', 'லிம் ஃபூட் இண்டஸ்ட்ரீஸ்' ஆகியவை பாதிக்கப்பட்ட நிறுவனங்கள்.

'குவே லாப்பிஸ்', 'டேப்பியோக்கா குவே', 'ஒண்டே-ஒண்டே' உள்ளிட்டவை பாதிக்கப்பட்ட உணவு வகைகள்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்த உணவு வகைகளைத் தயார் செய்து, விநியோகித்து விற்பனை செய்ய சிங்கப்பூர் உணவு அமைப்பு நேற்று முன்தினம் முதல் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது.

தற்காலிகத் தடை என்றுவரை நீடிக்கும் என்பது தற்போதைக்கு முடிவுசெய்யப்படவில்லை.